துயரம், நினைவுகள், காதல் – இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் ‘கடலை’ உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிரேஸ் குடும்பத்தினரை முதுமைப் பருவத்தில் மீண்டும் அதே இடத்தில் சந்திக்கிறார். திருமதி. கிரேஸ் அவருடைய இரண்டு மகள்களான க்ளோயி, க்ளேய்ர் ஆகியவர்களுக்கிடையில் மாக்ஸுக்கு நேரும் உறவும் அதைத்தொடர்ந்து நிகழும் மன நகர்வுகளும் விரிவாகவும் நுட்பமாகவும் நாவலில் விவரிக்கப்படுகின்றன. இதுவரையான ஜான் பான்வில்லின் நாவல்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டப்படும் ‘கடல்’ நாவலின் தமிழாக்கம் இது.