Description
அயலோன்
அறிவியலில் மேம்பட்ட மனிதனுக்கு இத்தனை தெய்வங்களின் தேவை எதற்கு ? என்பது குறித்த சிந்தனையே இப்படி ஒரு நாவலாக விரிவடைந்திருக்கிறது. ஒவ்வொரு மதத் தத்துவங்களும் அறிவியலை தன்னோடு இணைத்து, தன்னை நிரூபித்துக் கொள்ள பார்க்கையில், அறிவியல் தனித்து நின்று இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று ஒற்றை வரியோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது.
அறிவியல் மனிதனுக்கு உலகைப் புரிந்துகொள்ளும் கருவிகளையும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சக்தியையும் அளித்தாலும், வாழ்வின் அர்த்தம், நோக்கம், மனதளவில் இளைப்பாறுதல் மற்றும் தார்மீக வழிகாட்டுதல் போன்ற ஆழ்மனத் தேடல்களுக்கு, தெய்வங்கள் அல்லது ஆன்மீகக் கருத்துக்களே தேவையாய் இருக்கிறது.
தர்க்கம் சார்ந்து இயங்கும் அறிவியலையும், உள்ளுணர்வு சார்ந்து இவைகளோடு பொருளாசையும் இயங்கும் ஆன்மீகத்தையும், பயணிக்கும் ஒருங்கிணைக்கும் மனிதர்களின் நிகழ்வுகளே இந்த ‘அயலோன்’ நாவல்.
அறிவியலும் ஆன்மீகமும் சந்திக்கும் இடத்தில் உருவான இந்தக் கதை,
மனிதன் மேற்கொள்ளும் இரு விதத் தேடல்களையும்— அறிவின் தேடலும், உணர்வின் தேடலும் ஒரே பாதையில் இணைக்க முயல்கிறது.














Reviews
There are no reviews yet.