Description
இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா நாவல்
1990களின் இறுதியில் எழுந்துவந்த பெண் எழுத்து என்னும் அலையின் முதல் பாய்ச்சல்களில் ஒன்றாக சல்மாவின் எழுத்து வெளிப்பட்டது. பெண்களுக்கே உரிய மொழியில் பெண்களின் அந்தரங்க வாழ்வை, உணர்வுகளை, பிரச்சினைகளை மிக நுட்பமான மொழியில் சொன்ன இவரது கவிதைகள் தமிழ்ப் படைப்புலகின் எல்லைகளை விரிவுபடுத்தின. இவருடைய முதல் நாவலான ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ முஸ்லிம் சமூகத்துப் பெண்களைப் பற்றி அதுவரை தமிழ்ப் புனைவுலகில் பதிவுபெறாத பல்வேறு கூறுகளைக் கலாபூர்வமாகவும் நம்பகத்தன்மையுடனும் முன்வைக்கிறது.
மானுடவியல் ஆவணமாகவும் நுட்பங்கள் நிரம்பிய சுவையான புனைவாகவும் உருப்பெற்றிருக்கும் இந்த நாவல் அதிகம் வெளியில் தெரியாத ஓர் உலகினுள் நம்மை இட்டுச்செல்கிறது.
இந்த நாவல், ஆங்கிலம், கலீஸியன், ஜெர்மன், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.












Reviews
There are no reviews yet.