Description
எப்போதும் போல கவனமாக வர்ணனைகளையும், களம் பற்றிய நிலப்பரப்பின் சூழலைக் குறித்தும் எழுதுவதை தவிர்த்தேன். ஒரு படைப்பிற்கு இதெல்லாம் அவசியமென்றும், என் எழுத்துகளில் தொடர்ந்து அது விடுபடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. புத்தகத்தை வாசிக்கும் வாசகர் எழுத்தின் வழியே இந்த குறைபாடுகளைச் சரி செய்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். படைப்பில் எழுத்தும். ஓட்டமும் வாசகனுக்கு இவ்வசதியை ஏற்படுத்தித் தருவது எழுத்தாளரின் கடமையல்லவா?
n
n
n
nவாசகர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் கண்ணைக் கட்டிக் கொண்டு யானையைத் தொட்டு உணர்வது போல ஒரு பாவச்செயலுக்கு ஆளாகி விடுகிறோமோ என்ற குற்ற உணர்வு ஆகிவிடுகிறது. வாசகர்களின் கற்பனைகளை எப்போது தான் திறப்போம்?. வாசிப்பின் வழியே வாசகனை எழுத்தாளனோடு பயணிக்க வைக்க ஒரு சிறந்தவழியை ஏற்படுத்தி தரவேண்டுமல்லவா?
n
n
n
nநிச்சயம் என் படைப்புகளில் வாசகர்களை இவ்வாறுதான் என்னோடு அழைத்துக் கொள்கிறேன்.
n
n
n
n- தசரதன்
Reviews
There are no reviews yet.