Description

உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங் களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது. மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற நாவலான ‘The Unbearable Lightness of Being’ இன் நார்வேஜிய வடிவம் என்று சொல்லக் கூடிய இந்நாவலில் எலியாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவனும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித்தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக்கொள்வதையும், விரத்தியும் உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்தரிக்கிறார். பெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வேஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது. தாக் ஸூல்ஸ்தாத்: தாக் ஸூல்ஸ்தாத் (பி. 1941) நார்வே நாட்டின் முதன்மையான எழுத்தாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக மிக உயர்ந்த தரத்தில் வசீகரமான மொழி நடையோடு நாவல்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள் என முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஸூல்ஸ்தாத்தின் அரசியல் பார்வை காலம்தோறும் மாறி வந்திருப்பதை அவரது நாவல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின்பால் ஆரம்பத்தில் அவர் கொண்டிருந்த மனச்சாய்வு காலப்போக்கில் மெதுவாக மாற்றமடைந்து வந்திருக்கிறது. இவரது நாவல்களில் உச்சம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நாவல் ‘உடைந்த குடை’ (Shyness and Dignity). பெருமை மிக்க Nordic Council’s Literature Prizeஐ மூன்றுமுறை பெற்ற ஒரே எழுத்தாளர் தாக் ஸூல்ஸ்தாத்.

Additional information

Author

தாக் ஸூல்ஸ்தாத்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.