Description
‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன; சலிப்புறவும் வைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை? பெருமாள்முருகன். பெருமாள்முருகன்: பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
Reviews
There are no reviews yet.