வைக்கம் முகம்மது பஷீர் (1908 – 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலயோலப் பரம்பில் காயி அப்துல் ரகுமான் – குஞ்ஞாச்சுமா தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது வீட்டை விட்டு ஓடியவர், இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியான உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். இதில் போலீஸ் தாக்குதலுக்குள்ளாகிச் சிறைவாசம் அனுபவித்தார். சுதந்திரப் போராட்ட வீரர் எனும் நிலையில் மதராஸ், கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் துவங்கினார். பத்தாண்டு காலத்தைப் பாரதமெங்கும் தேசாந்திரியாகக் கழித்தார். பிறகு, ஆப்பிரிக்கா அரேபியா போன்ற நாடுகளிலும் சுற்றினார். இக்காலகட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இருக்க முடியாது. ஐந்தாறு வருடங்களை இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். ‘பால்யகால சகி’, ‘பாத்துமாவின் ஆடு’, ‘உப்பப்பாக்கொரு ஆனை இருந்தது’ ஆகிய படைப்புகள் இந்தியாவின் முக்கியமான எல்லா மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், பிரஞ்சு, மலாய், சைனீஸ், ஜப்பானிய மொழிகளிலும் வெளிவந்திருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய மாநில அரசுகளின் ஓய்வூதியம், ஃபெல்லோஷிப், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். மனைவி : ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர். பஷீர் 1994ஆம் வருடம் ஜூலை 5ஆம் தேதி மரணமடைந்தார். வைக்கம் முகம்மது பஷீர்: வைக்கம் முகம்மது பஷீர் (1908 – 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.