Description

மருள்
n
n
n
nசாமியாடிக்கு சாமியின் அருள் வந்து ஆடுவதை மருள் என்கிறோம். புதிதாக அருள் வந்து ஆடுபவர்கள் பெரும் ஆவேசத்துடன் ஆடுவதைக் கண்டதுண்டு. சிறுவயதில் இருந்து தன்னைச் சாமியாடியாக உணர்ந்து ஊர் காளியம்மன் கோவிலில் சாமியாடி வரும் பெண்ணின் கதைதான் இந்த மருள். அவர் மனதிற்குள் தோன்றுவதெல்லாம் அப்படியே நடக்கிறது. ஆதலால் சில தனக்குள் தோன்றும் சில எண்ணங்களை வெளியே சொல்லாமல் தனக்குள்ளேயே வைத்து மருகுவாள். அவளுக்கு முன் சாமியாடி யார்? அவள் எப்படிச் சாமியாடி ஆனாள்? சாமியாட்டத்தை விட்டு ஒதுங்க நினைக்கும் போது என்ன நடக்கிறது? அவள் காலத்துக்குப் பின் யார்? என பயணிக்கும் நாவல்தான் இது.
n
n
n
nமருள் ‍ கிராமத்துச் சாமியாடியான வீராயியின் கதை என்றால் அவளின் கதை மட்டுமல்ல, அவரைச் சுற்றி இருப்போரின் கதையும் கூட. கிராமத்துச் சாமியாடிகள் சிலர் நடக்க இருப்பதை சரியாகச் சொல்வதுண்டு. அப்படி ஒருத்திதான் வீராயி. இவள் கூட நான் பார்த்து வளர்ந்த சாமியாடிகளில் ஒருத்திதான். வாசித்து முடிக்கும்போது வீராயி உங்கள் மனசுக்குள் நிற்பாள் என்ற நம்பிக்கை எனக்குள் நிறையவே இருக்கிறது
n
n
n
n- பரிவை சே.குமார்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.