Description

மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் கைகளை முடமாக்கியும் ஒன்றில் வெறும் முண்டமாகவும் ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ? முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று என்னை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து பூமியை நோக்கி வீசிவிட்டனவோ? படைப்புகள் கர்த்தாவின்மேல் காழ்ப்புக் கொள்வது வழமைதானோ? படைத்தவனை நொந்துகொள்வதும் அவனோடு தீவிரமாக விவாதிப்பதும் சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேச்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை. பகையாகிப் படைத்தவனுக்கு எதிராகப் படை திரட்டி நிற்பது எனக்குப் புதிது. என்றால் கைகளைத் தூக்கிச் சரண்டைவதைத் தவிர வேறு வழியேது? பெருமாள்முருகன் Maadhorubaagan, ‘One Part Female’, is a contemporary Tamil novel set in the small town of Tiruchengodu in central – western Tamil Nadu. The work revolves around the lives of a young, childless couple, kaali and Ponna, whose hopes, longings and prayers for a child converge on the hill in Tiruchengode, that houses Ardhanareeswara, the form that the Hindu God Shiva takes where he is One part Female. பெருமாள்முருகன்: பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

Additional information

Author

பெருமாள்முருகன்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.