ஆரச்சாலை – துப்பறியும் நாவல் – சென் பாலன்
இப்புதினம் கேலக்ஸி பதிப்பக இளையதளத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அனைத்து அத்தியாயங்களும், வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்பட்ட சாதனையை நிகழ்த்தின. குற்றப் புலனாய்வு எனும் ஒரு வகைமைக்குள்ளாக மட்டும் அடங்கிவிடாமல் அரசியல், அறிவியல், வரலாறு எனப் பல தளங்களிலும் பயணிக்கும் புதினமாக ஆரச்சாலை மிளிர்கிறது.
மருத்துவர் சென்பாலன்
எழுத்தாளர் சென்பாலன் தனது புதுமையான எழுத்து நடையால் தனக்கென ஒரு வாசகர் பரப்பை உருவாக்கியவர். “அமேசான் பென் டு பப்ளிஷ்” வெற்றியாளராகக் கவனம் ஈர்த்தவர். பல்வேறு தமிழ் இதழ்களில் உடல் நலம், நோய் சிகிச்சை மற்றும் நவீன மருத்துவத்தின் நன்மைகள் குறித்து தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதி வருபவர். குற்றப்புலனாய்வு வகைமையிலான சமகால தமிழ் நாவல்களில் இவரது நூல்கள் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.
gbsadmin –
நீண்ட நாட்களுக்குப் பிறகு, வரலாற்றுப் புதினங்களில் இருந்து மாறுபட்டு, இல்லை இல்லை, முற்றிலும் மாறுபட்ட ஒரு நாவலை வாசித்தேன். அதன் பெயர் “ஆரச்சாலை”. இதை எழுத்தாளர் சென் பாலன் எழுதியுள்ளார்.
எங்கள் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் தற்சமயம் மிகவும் பரபரப்பாக இருக்கும் சாலைகளில் ஒன்றான ரேடியல் ரோடு என்று எனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது. இது ஒரு விசாரணைக் கதை.
விசாரணைக் கதை என்று சொன்னால் நமக்கு நிறைய காவல்துறை பற்றிய திரைப்படங்கள்தான் நினைவுக்கு வரும். வரட்டுமே! ஒரு புத்தகத்தில் ஒரு எழுத்தாளர் விசாரணையைக் கையாண்ட விதம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அது திரைப்படத்தில் நாம் பார்க்கும் நிழல் உருவங்கள் இல்லாமல், உங்கள் மனதில் ஒரு நிஜ கற்பனை உருவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி பயணப்பட வைக்கும். அதை இந்த எழுத்தாளர் அழகாகக் கையாண்டிருக்கிறார்.
இதில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நாம் பார்த்திருப்போம், கடந்து சென்றிருப்போம். கோபமானவன், அசட்டையானவன், காவலர்கள், காவல் துறை மேலதிகாரிகள், அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய தொழில்முறை அரசியல், சாமியார் மேடை என அனைத்தையும் கடந்து சென்றிருப்போம். திரைப்படத்தில் வரும்போது அதைப் பார்த்து கைதட்டிவிட்டு வந்திருப்போம். ஆனால் புத்தகமாகப் படிக்கும்போது அது கொடுக்கும் அதிர்வு வேறு விதமாக இருந்தது.
இக்கதையில் ஒரு ஆங்கில வசனம் வரும்: “common sequence are more common than uncommon sequences”. இந்த வசனமே கதையின் ஓட்டத்தையும் ஆழத்தையும் நமக்கு வெளிப்படுத்தும்.
அனைவரும் வாசித்து அனுபவம் பெறவேண்டிய புத்தகம் இது.
-சிரா.
புத்தகத்தின் பெயர்: ஆரச்சாலை
எழுத்தாளர்: சென் பாலன்
பதிப்பாளர்: கேலக்ஸி புக் செல்லர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ்
விலை: 180/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன் #ஆரச்சாலை #சென்பாலன்