“முதல் முறை முத்தம்
பண்ண ஆசைப் படுகிறவன்
முகத்தை அஷ்ட கோணலில்
வைத்துக் கொள்கிறான்
மலையேற்ற வீரனின் ஆயத்தங்களோடு அவள் இதழ்களில் கவனமுடன்
சுவடு பதிக்க விளைபவன்
அவள் கண்களின் வசீகரத்தால்
சுவாசத் திணறிப்
பின் வாங்குகிறான்
ஒவ்வொரு முறை
அவள் இதழ் பற்றும் போதும்
வழுக்கு மரம் ஏறுபவன் போல்
சரேலென தொடங்கிய இடத்துக்கே
வந்து விழுகிறான்
பேரருவியின் கீழ் முனை
பற்றிக் கொண்டு
மேலேற நினைக்கிறான் முதன் முதலில் முத்தம் பண்ண ஆசைப்படும் பொடியன்!”
– நறுமுகை தேவி