பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும் உன் நூதனங்களை வெகுவாக ரசிக்கிறேன் இல்லை உன் மீது எனக்கு எப்போதும் காதல் வரவே வராது என்றதும் சடுதியில் சொன்னாய், “ஏன் எனக்கென்ன குறைச்சல்?” – யாத்திரி