செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள்'...
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும்....
வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள். கடந்த ஐந்தாண்டுகளில்...
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச்...
இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை...
சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாக குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற...
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே...
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது...
இந்தத் தொகுப்பு அசோகமித்திரன் எனும் மேதையின் கடல் போன்ற எழுத்துப் பரப்பின் கரையில் சிலர் இணைந்து எடுத்திருக்கும் ஒரு கைப்பிடி மணல். 2014ஆம் ஆண்டு ஜுன் 7 அன்று நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்ற...
கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப்போல் அவரது மொழியும் அலங்காரமற்றது;...