இத்தொகுப்பிலுள்ள 17 கதைகளில் வாசகர் காண்பது நேயம், பேரம், கலகம், சமரசம் இவை பின்னிப்பிணைந்த மனித உறவின் பரிமாற்றங்களே. காலங்கள் அல்லது தலைமுறைகளால் இது மாறியதா என்னும் கேள்வியை இக்கதைகள் ஆழ்ந்து நோக்குகின்றன. வரலாற்றுக்கால, சமகால ஜீவிகள் நம்முடன் உரையாடுவது மனித உறவு பற்றியே. தமிழ் இலக்கியத்தில் அதிகம் தொடப்படாத, ஓரினச்சேர்க்கை மையமான ‘காத்யாயனி’, ‘பாண்டி’ இரு சிறுகதைகளும் சமகாலத்தில் தனித்து நிற்பவை.