நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும், வாழ்வின் ரகசியங்களும், தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில், வித்தியாசமான மனிதர்கள், சிருஷ்டிகரமாக இக் கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு, இக்கதைகளில் எழுத்தாளனின் பார்வையும் ஊடுருவியுள்ளது. இவரது ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும், கதையமைப்பில் மாறுதல்களுடன் பயணம் செய்துகொண்டிருப்பதால், இத் தொகுப்பிலுள்ள கதைகளும், முந்தைய தொகுப்புகளிலுள்ள கதைகளிலிருந்து மாறுபட்டு, மேலும் மாறுதல்களைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கின்றன. சுரேஷ்குமார இந்திரஜித்: சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com