Description

கு. அழகிரிசாமியின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும். கு. அழகிரிசாமி: கு. அழகிரிசாமி (1923-1970) புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். இடைசெவலில் பிறந்தவர். சென்னையிலும் மலேயாவிலும் பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்நேசன் முதலான பத்திரிகைகளில் பணியாற்றியவர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. எழுத்துலக அங்கீகரிப்பின் அடையாளமாக சாகித்திய அக்காதெமி விருது இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறுகதைக்காக இப்பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம் பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.

Additional information

Author

கு அழகிரிசாமி 

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.