Description
ALT+2 – இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இருக்கக்கூடிய ஜனத்தொகை அளவு எண்ணிக்கையில் இப்போதே கவிஞர்கள் கூட்டம் பெருகி விட்ட சூழலில்,
இன்னபிற விஷயங்களை இழுத்து, நீட்டி, தகவல்களை நிரப்பி,பக்கம் பக்கமாக நீர்த்த எழுத்துக்களால், பல எழுத்தாளர்களும் புதினம் படைத்து புளகாங்கிதம் அடைகிற சூழலில், மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது.
சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது. வடிவம் கைவராமல் போய் உதிர்ந்தாலும் ருசிப்பதற்கு சிறுகதை பூந்தியா என்ன? பலர் அப்படி நல்ல சிறுகதைக்கு உதாரணங்கள் கேட்ட போதெல்லாம் தேடித்தேடி பெரிய எழுத்தாளர்களின் பல சிறுகதைகளை வாசிக்கச் சொல்லிஇருக்கிறேன்.
இனி பெரிய சிரமமின்றி… இந்தச் சிறுகதை தொகுப்பைச் செல்வேன். பூங்காவில் அசைந்தாடிக்கொண்டு இருக்கும் ரோஜாக்கள் வசீகரம் தான். நமது தோட்டத்து மல்லிகைப்பூவை விடவா?
Reviews
There are no reviews yet.