Description
இந்து – முஸ்லீம் மக்களிடையே நிகழ்ந்த மதக்கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது ‘மூட்டம்’ எனும் புதினமாகும்.
n
n 
n
nமேலப்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள மசூதியை யாரோ இடித்துவிடுகின்றனர். அதனால் அங்குள்ள இந்து மக்கள் மீது முஸ்லீம்களுக்கு கோபம் உண்டாகிறது. இதனால் அப்போது வெகுண்டெழுந்தவர்கள் அங்கு வந்த முத்துக்குமார் என்ற இளைஞனை வெட்டுவதற்கு செல்கின்றனர். அவர்களிடமிருந்து முத்துக்குமாரை,
n
n 
n
n“முத்துக்குமார் கண்ணடிப்பதா? இவன் நடிக்கான்! இவனைத்தான் முதல்ல முடிக்கணும். பொல்லாத போக்கிரி. காதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்தபடியே சர்வசாதாரணமாகக் கேட்டான்.
n
n 
n
n“யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க! அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும். முத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்” என்பதிலிருந்து காதர்பாட்சாவின் சகோதரத்துவ / மதநல்லிணக்க சிந்தனையை அறியமுடிகிறது. இச்சிந்தனை அனைவரிடமும் மேலோங்க வேண்டும்.
 
				










 
															 
								 
								 
								 
								 
								
Reviews
There are no reviews yet.