Availability: In Stock

வாஷிங்டனில் திருமணம்/Washingtonnil Thirumanam

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Category:
Brands:

Description

பத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது.
n
nவாஷிங்டனில் திருமணம் – வழக்கமான ஐயர் வீடு பாரம்பரிய திருமணம், அதனை வாஷிங்டன் மாகாணத்தில் கோடி கணக்காக பணம் கொட்டி நடத்த என்னும் மிசஸ் ராக்பெலர், திருமணத்தின் பொழுது நடக்கும் வைபவங்களை தலைப்பு செய்தியாகி விநோதமாய் பார்க்கும் மக்கள் & அமெரிக்க ஊடகம். சாவி இந்த இரண்டு வரியை வைத்தே சுவையான கல்யாண சமையல் சாதம் சமைத்திருக்கிறார்.
n
nசுமார் 500 பாட்டிகள் வாஷிங்டனின் உயரமான கட்டடங்கள் மீது அப்பளம் போட துவங்குவது, அரை குறை ஆங்கிலம் அறிந்த ஐயர்கள்-சாஸ்த்ரிகள், விபூதியை கோடாக நெற்றியில் வைத்துகொள்வது எப்படி என்று ஆராய்ச்சி செய்யும் அமெரிக்க ஊடகம், மிசஸ் ராக்பெல்லரை மாமியாக மாற்றி நலங்குக்கு அமர வைத்த சடங்குகளென பக்கத்துக்கு பக்கம் சிரிப்புக்கு பஞ்சமில்லாத கதை.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.