Description

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் சரவணன். இவனது அப்பா இவனது இளம்பருவத்திலேயே இறந்துவிட்டார். இவனுக்கு ஓர் அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. அண்ணனின் மனைவி தங்கம்மா. அண்ணன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அண்ணி வயல்வேலை பார்த்துச் சரவணனைப் படிக்கவைத்தாள். சரவணன் படித்து அரசுப் போட்டித் தேர்வு எழுதி அரசு அலுவலகத்தல் உதவி இயக்குநர் பதவியில் அமர்ந்தார். தன்னுடனேயே தன் அம்மாவையும் தங்கையையும் தன் அண்ணியையும் குடியிருக்க வைத்தார்.
n

n
nசரவணன் பணிபுரியும் அலுவலகம், பிற அரசு அலுவலகங்களுக்கு எழுதுபொருட்களை வாங்கி, வழங்கும் பணியினைச் செய்துவருகிறது. இதனால் பல்வேறு ஒப்பந்ததாரர்களின் கவனத்துக்குரியது. சரவணன் நேர்மையானவன் என்பதால் அவன் தவறான ஒப்பந்ததாரர்களுக்கு இடையூறாக இருக்கிறான். அவனைப் பல்வேறு வழியில் சிக்கவைக்க அவன் அலுவலகத்தல் பணிபுரிவோர் சதித்திட்டம் செய்கின்றனர். அதே அலுவகத்தில் படித்துப் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று பணியில் சேர்கிறாள் அன்னம். அவள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவள் என்பதால் அவளைக் கீழ்நிலைப் பணியில் அமர்த்துகின்றனர். அதனையும் தட்டிக்கேட்கிறான் சரவணன்.
n

n
nதன் தங்கையைத் தன்னைப் போன்ற நேர்மையான காவல்துறை உயர் அதிகாரியான ராமசாமி என்ற தன் நண்பனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறான் சரவணன். ஒப்பந்ததாரர்கள் சரவணன் மீது வீண்பழி சுமத்தி அவனை அலுவலகத்தை விட்டே விரட்ட நினைக்கின்றனர். ஒட்டு மொத்த அலுவலகமும் சரவணனுக்கு எதிராகச் செயல்படுகிறது. அன்னம் மட்டும் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறாள். எல்லாச் சதிகளையும் முறியடித்து சரவணன் வெற்றிபெறுகிறான். அன்னத்தை மணமுடிக்கிறான்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.