வீட்டிற்கு ஒரு நூலகம் – ஆய்க்குடியின் செல்வன் (எ) மணிகண்டன்

புத்தகம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வாழும் ஆதாரங்கள் நிறைந்த சமூகத்தில் வாழும் நாம் அதன் பயணம் தொடர தொடர்ந்து இயங்க வேண்டும். நமது முன்னோர்கள் அதிகம் பள்ளி செல்லாதவர்கள் ஆனால் அறிவை நிறைய தேடி தேடிக் கற்றுக்கொண்டார்கள் அவர்கள் அறிவு நிறைந்த சமூகத்தை படைக்க உதாரணம் தந்தார்கள். 

அறிவு என்பது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல என்ன செய்யக்கூடாது என்பதையும் கற்பதே. இதையே புத்தகத்தின் வாயிலாக இன்று கிடைக்கப்பெறுகிறோம். தொற்றுக்கள் சூழ்ந்த இந்த 21ம் நூற்றாண்டில் வாழும் காலம் முழுவதும் எதை செய்யக்கூடாது என்பதை கற்கவே காலம் போதாது அதை உணர்ந்தவர்களின் குறிப்புகளால் நாம் அதை கடப்போமே. அறிவு யாரையும் நல்லவராகவோ கெட்டதாகவோ மாற்றும் ஆனால் எல்லோரும் மாற்றுப் பாதையில் இருக்க விரும்புவதில்லை. 

“ஐம்பதில் வளையாததையும் அடுத்த நொடி வளைக்கும் கூர்திறன் புத்தகங்களில் மட்டுமே உள்ளன” வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம் ஊரில் இருந்து உலகம் அறிவோம். 

நன்றி,

ஆய்க்குடியின் செல்வன் (எ) மணிகண்டன்

 

0 Comments

  1. BALAKUMARAN VASUDEVAN

    தங்கள் புதிய முயற்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்க்கும் நல்வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *