தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 20

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3
அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6
அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9
அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12
அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15
அத்தியாயம்-16 அத்தியாயம்-17 அத்தியாயம்-18
அத்தியாயம்-19

வேலை பார்க்கிறவர்களுக்கு மாலை வரும்போது கூடவே களைப்பையும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறது.

வயிற்றில் இருக்கும் குழந்தை வேறு களைப்பை இன்னும் அதிகமாக்கியது சுப்ரியாவுக்கு.

வாசலில் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்த சுப்ரியா வெகுவாக அதிர்ந்தாள்.

அங்கே அஷோக்கின் அப்பா சுந்தரேசன்.

“இந்த ஆளை ஏம்மா உள்ளே விட்டே? யாருய்யா நீ? முதல்ல வெளியே போ” சுப்ரியாவிடம் ஆவேசம்.

“முதல்ல நீ உள்ளே வா..”

“நான் உள்ளே வர்றது இருக்கட்டும். முதல்ல இந்தாளை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லு.”

“பெரிய மனுஷரை அப்டி எல்லாம் பேசக் கூடாது சுப்ரியா.”

“இந்தப் பெரிய மனுஷர் உன்னையும் என்னையும் என்னல்லாம் பேச்சுப் பேசினார்னு மறந்துடுச்சா உனக்கு?”

“சுப்ரியா. உன் கோபம் எனக்குப் புரியுதும்மா..” சுந்தரேசன் பேசப் போக,

“உங்கப் பேச்சை கேக்க இங்க யாரும் தயாரில்லை” என்ற சுப்ரியாவை,

“அவர் என்னதான் சொல்றார்னு கொஞ்சம் கேளேன்..” என்றாள் சாவித்ரி.

அம்மாவை முறைத்த சுப்ரியா, “சரி. சொல்லுங்க. என்ன விஷயம்?”

என்றாள் விறைப்பாக.

“என்னை மன்னிச்சிடும்மா சுப்ரியா..” சுந்தரேசன் குரல் தழதழக்க..

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத சுப்ரியா சற்று ஆச்சரியப்பட்டாள். ஆனாலும் அவளின் சினம் குறையவில்லை. எதுவும் பேசாமல் மௌனம் காத்தாள்.

சுந்தரேசன் தொடர்ந்தார். “உன்னையும் உங்க அம்மாவையும் நான் ரொம்ப தப்பாப் பேசிட்டேன்.”

“பேசறதை எல்லாம் பேசிட்டு.. இப்ப மன்னிச்சிடுன்னு ஒரு வார்த்தை சொன்னா ஆச்சா?”

“என்னை நீ மன்னிக்கலைன்னாலும் பரவாயில்லை சுப்ரியா. என் மகனை மன்னிச்சு ஏத்துக்கம்மா.”

“என்? அவருக்குதான் நீங்க பொண்ணு பாத்து வச்சிருக்கீங்களே? இன்னும் நாள் குறிக்க வேண்டியதுதானே பாக்கி?”

“நான் எத்தனை பொண்ணு பாத்தாலும் என் மகன் மனசு பூரா நீதாம்மா சுப்ரியா இருக்கே. அவன் உன்னை இன்னும் காதலிக்கிறாம்மா.”

சுந்தரேசன் குரல் தழுதழுத்தது.

அதற்குப் பிறகு அவர் பேசிய எதுவும் சுப்ரியாவின் செவிகளில் விழவில்லை.

“அஷோக் இன்னும் உன்னை காதலிக்கிறான்.”

சுந்தரேசன் கூறிய அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன சுப்ரியாவின் காதுகளில்… கரைந்த நெஞ்சத்தில்…

உடனே அஷோக்கை சந்திக்க வேண்டும் என அவளின் இதயம் பரபரத்தது.

‘இப்பவே அஷோக்கைப் பாக்கணும். அவனை இறுக கட்டிக்கொண்டு இந்த உலகத்தை மறக்க வேண்டும்’ – சுப்ரியாவின் காதல் உள்ளம் நெகிழ்ந்து உருகியது.

“அஷோக்கின் வாழ்க்கை உன் கையில்தாம்மா இருக்கு..” கிளம்புவதற்கு முன் முத்தாய்ப்பாக சொல்லிவிட்டுப் போனார் சுந்தரேசன்.

******

நெஞ்சம் படபடக்க அஷோக்கிற்கு போன் செய்தாள் சுப்ரியா.

“ஹலோ…”

“சுப்ரியா..?”

தன் பெயரை அஷோக் உச்சரிக்க கேட்ட சுப்ரியாவின் இதயம் நெகிழ்ந்தது.

என்ன பேசுவது? எப்படி தொடங்குவது எனப் புரியாமல் விக்கித்தாள்.

மௌனத்தில் கரைந்த சில நொடிகளுக்குப் பிறகு –

“என்கூட ஒரு கப் காபி சாப்பிட வர முடியுமா அஷோக்?”

மறுமுனையில் அஷோக்கின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது.

கசிந்த கண்களை துடைத்துக் கொண்டான்.

“ஷ்யூர் சுப்ரியா. எப்ப மீட் பண்ணலாம்?”

“இப்பவே.”

“எங்கே?”

“பீச்?”

“இதோ கிளம்பிட்டேன்.”

வீசிக்கொண்டிருந்த கடற்கரைக் காற்றில் ஈரம் சற்று அதிகமாகவே இருந்தது.

அஷோக், சுப்ரியா இருவரிடமும் மௌனம்.

0 Comments

  1. சீக்கிரமாகவே நிறைவு பகுதியை நெருங்கி விட்டோம் போல…, இன்னும் நாலு கேள்வி நறுக்குனு சுந்தரேசனையும், அசோக்கையும் கேட்டிருக்கலாம். இதுதான் பெண் மனசு உடனே இளகி விட்டதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *