சல்மாவின் கதை வெளிகள் பெண்களின் பதற்றமான காலடிகளின் மெல்லிய சப்தங்களால் நிரம்பியவை. அவர்களது கண்ணீரால் ஈரமானவை. மதிப்பீடுகளின் கனத்த சுவர்களால் சூழப்பட்ட வீடு என்னும் வெளிகளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் போலவும் பொன்வண்டுகளைப் போலவும் பறந்து திரியும்...
பேச்சாளர் செல்வி சுல்தானா பர்வீன் பேசிய “சிந்தனைக்காக சில நிமிடங்கள்” எனும் தொடர் நூல்வடிவம் பெற்று மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. மூன்று பாகங்களும் சேர்ந்து தள்ளுபடி விலையில் பெறலாம்
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எதிரொலிகள் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள். மதத்தில் கருணைக்குப் பதிலாக வெளிப்படும் சடங்குத் தன்மையையும் அரசியலில் பொது மேன்மைக்கு முரணாகப்...
1971முதல் 1976வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும்...
செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள், பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும்...
திண்ணமாக நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவர் ஆவார். நபியின் மனைவியரோ அவர்களுக்கு அன்னையர் ஆவர். (அல்குர்ஆன்-33:6) இறைத்தூதர்களின் மனைவிமார்களை ‘உம்மஹாத்துல் முஃமினீன்’ எனக் குறிப்பிடுகிறான் எல்லாம் வல்ல இறைவன். உம்மஹாத்துல் உம்மத்...
‘பர்ஸா’ என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். ‘பர்தா’வின் எதிர்ப்பதம். இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கை...
வளைகுடா நாடுகளில் வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. வானளாவிய கற்பனைகள், வண்ணமயமான கனவுகள். ஆனால் வாழ்வின் வலி சிறிதல்ல. பெருந்தொற்றுக் காலத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பட்ட பாடுகள் ஏராளம். தொற்று...
மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத் தீவிரமாக வெளிப்படுத்தும் நாவல். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு மர்மமான நாவல் போலத் தோற்றம் தந்து, வாசிப்பவரை வாழ்வின் மர்மங்களை விடுத்து உறவுகளின் பருண்மையான அர்த்தங்களைத்...
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’.வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ...
மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித்துவத்தையும் இருப்பையும் பொருண்மையுடன் தக்கவைத்துக்கொள்ள இடையறாது முயலும் பெண்களின் சித்திரங்களே இக்கதைகள். குலைந்திருக்கும் உறவுகள் சார்ந்த சமன்பாடுகளை, கரிசனத்துடன் சுட்டி நிற்பதின்...
ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் உழலும் மகளிரில் சிலர் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக் காரோட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அனுபவப் பதிவுகளே ‘பெண் டிரைவர்’ என்ற இந்நூலின் உள்ளடக்கம். இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பன்னிரண்டு பெண்களின் கதைகள் தொழிலில்...