இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 எழுதப்பட்டவை. கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன. அவரது முந்தைய தொகுப்புகளான மண்டை ஓடி, போயாக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக்கொண்டுள்ளன. விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன. அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகிறது.
மனிதர்கள் எல்லோருக்குமே இரண்டு முகங்கள் உண்டு. எம்முகத்தைக் காட்ட வேண்டுமென்பதில் உள்ள தேர்வே நமக்கு ‘இத்தகைய மனிதன்’ என்ற அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சமயங்களில் நம் பிடியில் இருக்கும் தேர்வு, அசாதாரண சந்தர்ப்பங்களில் கை நழுவிவிடும். அசாதாரண நேரங்கள் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கலாம். தனியாக இருக்கும் போது ஒழுங்காக இருக்கும் மனம் கூட்டமாக சேரும்போது வேறொன்றாகிவிடும். அல்லது கூட்டமாகவே இருக்க பழக்கப்பட்ட மனம் தனியாக இருக்கும்போது முழுவதும் மாறி நிக்கும். இவைப்போல் இல்லை நான் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பவன் என்று ஒருவர் சொல்லலாம். அவரின் அன்றாடங்களில் எவ்வித மாற்றங்கள், இடையூறுகள் ஏற்படாதவரை அவர் சொல்லியது சரியாக இருக்கும். எப்போது அதில் ஒரு அடி விழுகிறதோ அப்போது அவரே நம்ப முடியாதவண்ணம் அவர் மாறத்தொடங்குவார். அப்படி ஒருவரின் கதைதான் சுரேஷ் ப்ரதீப்பின் ‘உடனிருப்பவன்’ கதை.
- எழுத்தாளர் சங்கரன்
பதின்பருவத்தில் வளர்ச்சிதை மாற்றம் கொள்ளும் உறுப்புகள் தொடங்கி, கருமுட்டை நிற்கும் காலம் வரை பெண் உடல் இயக்கத்தில் எத்தனையோ குழப்பங்கள், குளறுபடிகள், கோளாறுகள் நம் சமூகத்தில் நிலைபெற்றுள்ளன. அதை ஆரோக்கிய நோக்கில் அணுகி, களையும் முயற்சிகள் வெகு குறைவே . குறிப்பாக, இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய வாழ்வியல் நோக்கில், பெண் தன்னைத் தானே செம்மைப் படுத்திக் கொள்வதில் சரியான வழிகாட்டல் போதாமை உள்ளதை மறைக்க முடியாது. அதை களைகிறது இந்த நூல். பதின்பருவம், பேறுகாலம் ஆகிய கட்டங்களில் பெண்களின் ஆரோக்கியத்தை சுயமாக பேணிக் கொள்ளும் ஆலோசனைகளை இந்த நூல் கொண்டுள்ளது. இது சுயமருத்துவ நூலல்ல. பெண்களின் உடல்நலத்தில் அக்கறைக் கொள்ளும் ஆலோசனை அல்லது வழிகாட்டி நூல் என கொள்ளலாம். தாயாய், மனைவியாய், சகோதரியாக, மகளாக வாழும் அனைவருக்கும் இந்த நூல் சேர வேண்டும்.
கதைக் கருக்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல் திரைக்கதைகளை பார்ப்பதற்கு மட்டும அல்ல.அதனை அவதனித்து வாழ்வியல் கூறுகளை சொல்ல விழையும் நல்ல திரைக்கதைகளை வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க மனிதன் முயன்றால் வாழ்வியல் கூறுகளை.எளிமையாக உணர்வதற்கு இந்த நூல் உதவும்.
இந்தப் புத்தகத்தில் எஞ்சின்கள் மீதான என் காதலை கொஞ்சம் உங்களுக்கும் கடத்த முயன்றிருக்கிறேன்.
உண்மையில் வாகனம் எஞ்சின் வடிவமைப்பு இதெல்லாமே எக்கச்சக்க கணிதமும் சமன்பாடுகளும் புழங்குதிற துறை. சில சமன்பாடுகள் எனக்கே புதிதுதான். ஆனால் அவை புரியாமல் போனது அவைகளின் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில் தடையாக இல்லை.
விண்ணிலிருந்து புவிக்கு வருபவர்கள் புனைவிற்கு புதியவர்களல்ல, ஆனால் காலந்தோறும் அப்புனைவுகளுக்கான தேவை வேறு ஒன்றாக இருக்கிறது. நவீன மொழியில் பல்மதத்தன்மை (Syctretic) கொண்ட ஒரு பாத்திரத்தை படைப்பது அரசியல் ரீதியான சவாலாகவும் ஆகிட, அரசியலின் பொருட்டே அதனைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். அதே நேரம் எர்தா ஒரு சுவாரசியமான நாவலாகவும் வந்துள்ளது.
பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன.
-பா.வெங்கடேசன்
போருக்குப் பிந்தைய ஈழச் சமூகம் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் பழம் பெருமைகளை அசை போடுகையில் அதில் மீண்டும் சாதி, தீண்டாமை ஓர்மைகளுக்கும் ஒரு இடம் இருப்பதையும் இதை எதிர்கொள்ள இப்போதும் தீண்டாமை ஒழிப்பு குறித்த பிரக்ஞை மற்றும் செயல்பாடுகளின் தேவை உள்ளதையும், ஆனால் அது உறுதியாகப் பழைய வடிவில் இருக்க இயலாது என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு அடையாளப்படுத்தவும் செய்கிறார் இந்நூலாசிரியர் யோகராஜா - அ. மார்க்ஸ்
வேறொரு காலத்தின் மொழி, வாழ்க்கையின் நினைவுகள் தேறல்போல ஏறிய கவிதை உலகம் டி.கண்ணனுடையது. மகத்துவமான ஞாபகங்களைக் கொண்ட ஒரு கோயில் தேர், கோயிலின் மதில் சுவருக்கு வெளியே சோடியம் விளக்கொளியில் உடைந்து கிடப்பதைப் பார்க்கும் உணர்வை இவரது கவிதைகள் ஏற்படுத்துகின்றன. சிறுகதையாசிரியர் மௌனி தன் கதைகளில் எழுப்ப முயன்ற பாழ்பட்ட வசீகரத்தை இவர் தனது இசைமை கூடிய மொழியாலும், பழைய ஞாபகங்கள் தொனிக்கும் சொற்களாலும் உருவாக்குகிறார்.
கவிதைக்காரன் இளங்கோவை ஒரு எழுத்தாளனாக பேச்சாளனாக நண்பனாக நான் எழுத வந்த காலத்திலிருந்து தெரியும். அவருடைய பிரெய்லியில் உறையும் நகரம் என்ற கவிதைத் தொகுப்பில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகளைத் தமிழ் இலக்கிய உலகில் யாரும் மேற்கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. அதன் பிறகு நான் படித்த அவருடைய முழுமையான படைப்பு ஏழு பூட்டுக்கள் என்ற புதினம். கதை துண்டு துண்டாக நகர்கிறது. ஏதோ ஒரு கயிறு திடீரென்று அவற்றில் சில துண்டுகளைக் கட்டுகிறது. பின்னர் புதிதாக மேலும் சில துண்டுக் கதைகள். இப்போது நாம் கயிற்றைத் தேடத் தொடங்கி விடுகிறோம். கதையில் எல்லாமே வருகிறது. தன்னுடைய கதையைத் தானே எழுதுபவர்களின் கதையும் கதைக்குள் தொலைந்து போனவர்களின் கதையும் வருகிறது. இந்த நூல் எந்த விதமான புதினத்தின் கட்டுக்குள்ளும் அகப்படாமல் இருக்கிறது. எங்கும் ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை. முடிவிலிக் கிழவனின் புன்னகையைப் போல.