தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர், கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை பெற்றவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஹுக்கா புகைப்பது அரபு சமூகத்தினரின் பாரம்பரிய பழக்கம். ஆனால் புகையிலை, நிகோடின் பாதிப்புகள் இல்லாத ஹுக்காகளைப் புகைப்பதற்கான ஷிஷா பார்கள் அங்கு உள்ளன. பூமியிலிருந்து 50 அடி உயரத்தில் 1 மணி நேரம் வானில் பறந்தவாறே செல்லும் பறக்கும் உணவுக்கூடங்கள் அங்கு உள்ளன. குதிரை அருங்காட்சியகம், காபி மியூசியம், அல் சிந்தகா பகுகியில் உள்ள ஒட்டக அருங்காட்சியகம் என அங்கு நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன லிவாவில் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ளக் கூடிய பேரீச்சை திருவிழா நடக்கிறது உலகின் ஏற்றுமதி - இறக்குமதியில் 25% துபாய் நாட்டில் நடக்கிறது பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பாதுகாத்து ஏற்றுமதி செய்கிறார்கள்.இவ்வாறு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய பல்வேறுவிதமான தகவல்களைத் தரும் களஞ்சியம் இந்நூல்.
இந்திய சிறுபான்மையினர் பிரச்சினைகளை ஐநா மன்றத்தின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்வது ..கொரோனா முழு முடக்கத்தில் ,வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் இந்திய அரசு காட்டிய மெத்தனம் ...எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பயணியின் பார்வை
நாம் வாழ்கின்ற ஒரு நாட்டில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுகறைத் தெரிந்தே செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது மிகவும் கொடுமை. அப்பாவும், தியோ டோனியும் தவறு என்று தெரிந்தும் ஸ்மித்தைக் கொலை செய்யுத் திட்டமிட்டதும் அதுபோலத்தான். ஆனால்,...
Music குறிப்பாக jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது.
ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.
-சரவணன் மாணிக்கவாசகம்
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவிதைகள். சுடரின் அசைவைப்போல நளினமும் ஒளியும் ஒருசேர நிகழும் அபூர்வ கணங்களையும் கொண்டவை. எளிய சொற்களைச் சோழிகளாக்கிச் சுழற்றி வீச அவை நவமணிகளாகும் ஜாலத்தை பொன்முகலியின் மொழியில் காணமுடிகிறது.
சுசித்ரா -
சொந்த ஊர் மதுரை. அறிவியலில் பட்டமேற்படிப்பு செய்திருக்கிறார். தற்போது ஆய்வுப்பணி
நிமித்தமாக சுவிட்ஸர்லாந்தில் பாசல் நகரில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு
மொழிகளிலும் புனைவு எழுதி வருகிறார். மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். .அண்மையில் இவரது ‘ஒளி’, ’ஹைட்ரா’ ஆகிய கதைகள் அதிகம் கவனிக்கப்பட்டன.
ஒரு பெண்ணுக்கு குடும்பம் என்பது அவளது வழிநடையில் சந்திக்கும்
ஒரு சம்பவம்தான். அதைக் கூட்டிக்கொண்டு செல்வது ஒன்றும் தியாகமோ,
புனிதமோ அல்ல. அதுவொரு சமூகப் பொருளியல் அம்சத்தின் வரவு
செலவுத் திட்டம். அது எப்படி பெண்களுக்கு மட்டும் காலாதீதமான
அடிமைத்தனம் ஆகிறது? இவ்வாறு அதிகபட்ச ஒழுங்கியலாக வரலாற்றில்
கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவிழ்த்து நிராகரிக்கும் கவிதைகளே லாந்தரின்
தனிச்சிறப்பு.
‘மலைகள் அப்பனாக இருக்கட்டும்
அதை உடைத்து அப்பனைக் கொன்று
பல்லாயிரம் மகவுகளைச் சமைப்போம்'
‘பூஜ்ஜியத்தை நேசிப்பதால் எனக்கு வெட்கமில்லை’ என்று பல
தீவிரமான வாசகங்களை எழுதும் லாந்தரின் மொழியின் முன்பு இந்தச்
சமூகம் பல கல்லெறி தூரங்களைக் கொண்டிருக்கிறது.
- கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
ஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.
சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அனுபவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.
உருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.
பொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.
நாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் உணரமுடியும்.
ஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற்கு எவ்வாறு பொருந்துமோ அதுபோலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.
கணபதி சுப்பிரமணியம்

அடர்வனத்துக்குள் நம் விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்லும் இக்கவிதைகள் வனமதிரக் கேட்கும் காட்டுயானையின் பிளிறலாகவும், அதேவேளை முன்னிரவு நேரத்து மின்மினிப் பூச்சியின் ஔிச்செறிவாகவும் மனச்சித்திரங்களின் வழியே வாசகர்களுக்குள் கடத்தப்படுகின்றன. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள் தீர்ந்த பின்னரும் எஞ்சி நிற்கும் கவிதைகளைக் கல்வெட்டில் செதுக்க ஆரம்பித்தால் பூமியின் மலைகள் அனைத்தையும் பெயர்த்தாகவேண்டும். எவற்றுடனும் ஒப்பிடமுடியாத அந்தப் பெருவெளியில் இந்நூலும் ஒரு தேக்கரண்டி இனிப்பு. கரையருகே மிதக்கவிடப்படும் தீபத்தைக் காற்றின் திசைக்கு அனுப்புவதற்காகக் கொஞ்சம் கைகளால் அலைகளை உருவாக்கும் சிறு முயற்சி இக்கவிதைகள்