ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது.
– எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரையிலிருந்து
நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு...
கதைகள் அனைத்தையும் வாசித்த பின் இந்த எழுத்துகள் யாருக்கானது என எண்ணிப் பார்க்கையில் இதுவரையில் எந்த இலக்கியமும் தங்கள் ஆழ்மனதை உண்மையாகப் பிரதிபலிக்கவில்லை என்று உணர்பவர்களுக்காக எழுதப்பட்டது என்னும் உணர்வு தோன்றுகிறது.
– லதா அருணாச்சலம்
வெறும் சாட்சியாக மட்டுமே கடந்த அசாதாரண நிகழ்வுகளின் தொகுப்பு போல எந்த இடத்திலும் ஒரு விலகல் தன்மை கொண்டவை இவரது கதைகள். ஒவ்வொன்றும் இந்த யதார்த்த உலகில் இருந்தும் அந்த உலகுடன் ஒன்றிணையாத முழுவதும் விலகாமல் ஒட்டிக் கொண்டும் இருக்கிற ஒருவனின் கசப்புகள். இந்தத் தொகுப்பில் அவனது தனிமையை வாசகருக்கு கள்ளாக மாற்றிப் படைத்திருக்கிறார்.
– காளிப்ரஸாத்
மணியின் கதாபாத்திரங்களுக்கு Sexual poverty என்பது இருக்காது, ஆனால் பலர் வயிற்றுப்பசியின் அகோரகொடுமையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். எளிதில் இணங்கக்கூடிய பெண்கள் அடிக்கடி வருவார்கள். ஆனால் இதயத்தைப் பூட்டி அதற்குள் யாரோ ஒருவரை வைத்திருப்பார்கள். The Seven Husbands of Evelyn Hugoவில் Evelyn எண்ணற்ற ஆண்பெண்களுடன் உறவுகொண்டு விட்டு, கடைசியில் நான் எப்போதும் உண்மையாய் காதலித்தது என்று ஒரு பெண்ணை அடையாளம் காட்டுவாள். இது போல் உலகமா, மனிதர்களா என்று மணியின் கதைகளைப் படித்து ஆச்சரியப்படுபவர்கள் பாக்கியவான்கள். தர்மர் பார்த்ததைப் போல உலகில் நல்லவற்றை மட்டுமே பார்க்கும் சித்தி அவர்களுக்குக் கூடிவந்திருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாகச் சமூக அசைவியக்கத்தைப் புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள்,...
‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பின் தலைப்புக் கதை. அலுவலகநண்பர்கள் ஆறுபேர் குட்டை மேசையில் குழுமி அமர்ந்து
கொண்டாட்ட மதுபாவிப்பில் உரையாடும் கதை. பாலியல்தொடர்பான செய்திகள் விளம்பப்படும் உரையாடல். ஆனால்
ஒருசொல்லும் வாசகனை வக்கிரத்தின்பால் இட்டுச் செல்வதில்லை. வட இந்திய ‘சாய் கா துக்கான்’ என்று அழைக்கப்படும் சாயாக்கடைகளில், வாடிக்கையாளர்கள் சிலர் கேட்பார்கள் ‘கொஞ்சம் மலாய் சேர்த்துப் போடுங்கள்’ என்று பாலியல்சம்பவங்கள் வரும் கதைகளில், நாவல்களில், எழுதியவரைப் பார்த்து, படைப்பாளப் பதிப்பாளர்கள், பாலியல் சம்பவங்களை
‘கொஞ்சம் ஏத்தி எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்பதுண்டு எனும் செய்தி நினைவுக்கு வருகிறது.
எட்டு மாதங்களாக, வாரம் முன்று நாட்கள் மட்டும் மென்பொருள் நிர்வகிக்க நண்பர்களின் அலுவலகத்துக்கு வரும் இசூமி எனும் இளம் பெண்ணிலிருந்து பகரும் மேனி வாசம் பற்றிய உரையாடலே
மேற்சொன்ன சிறுகதை. அற்புதமான கடைசி வரிகளுடன் கதைமுடிகிறது. அறிவார் அறிவார், அறியார் அறியார் அந்த மணத்தின் தனித்துவத்தை.
‘தானிவத்தாரி’ எனும் கதைத் தலைப்பு ஜப்பானியச் சொல்.
அதன் பொருள் கவிதை போலிருக்கிறது – அடர்ந்த பள்ளத்ததாக்கைக்
கடந்து மற்றொரு பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாடல். இந்த
கதையின் கதாபாத்திரம் கஷூமி சிறப்பான படைப்பு.
‘இதய ஒலி’ டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள்....
சமூக வலைதளங்களின் உபயத்தால் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்கள் பொதுவெளியில் பெருகிவிட்ட காலம் இது. பெரும்பாலான படங்களைப் பற்றிய அலசல்களும் தீர்ப்புகளும் படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே வெள்ளமாகப் பெருகும் காலம். இவ்வளவு தெறிப்புகளுக்கு மத்தியில்...
அறிஞர் தொ. பரமசிவமன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும்...
கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனி மனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாக பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்து வரும் நாடுகளில் சிக்கலான வாழ்வியல் சூழல்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாக போர்களையும் மரணங்களையும் தோற்றுவித்து வரும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. புது நிலங்களில் தங்கள் வாழ்வு வெறும் பிழைத்திருப்பதிலிருந்து ஒரு படியேனும் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அடுத்த நிலையில் புலம் பெயர்தல், ஒரு ஆறுதலான அல்ல ஒரு வசதியான சூழ்நிலையில் அது அமைந்திருந்தாலும் அப்புது மண்ணின் மனிதர்களாக மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும், இழக்கும் உறவுகளும் மொழியும் பண்பாடும் எதிலிருந்து மீண்டும் முளைக்கும்? இந்த விவாதங்களை எழுப்புவதினாலேயே இச்சிறுகதைகள் உலகத்தன்மையுடன் அனைவருக்குமான கதைகளாக மாறுகிறது.
மனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து...
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது....