தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. அவர்களின் பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விதந்து சொல்லவேண்டியதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக...
குஜராத்தி இலக்கிய ஆசிரியர்களில் ஒருவரான கிருஷ்ணலால் ஸ்ரீதரணி காந்தி இறந்த போது ஆற்றிய வானொலி உரையில் அவர் சாட்சியாக இருந்த ஒரு நிகழ்வை பற்றி சொல்கிறார். தண்டி யாத்திரை சென்றபோது காரதி எனும் சிறிய கிராமத்தில் தங்குகிறார்கள். ஒருநாள் காலை காந்திஜியை நோக்கி கிராமத்தினர் ஒரு குழுவாக பெண்கள் முன் நடக்க வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் வந்தார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த இசை கலைஞர்கள் பீடு நடையின் தாளகதியை கட்டுப்படுத்தினார்கள். ஆண்கள் பழங்கள், மலர்கள் மற்றும் பண முடிப்புகளை தாங்கி வந்தார்கள். காந்திஜியை அவர்கள் பக்தியுடன் அணுகி மரியாதையுடன் அவருடைய காலடியில் காணிக்கைகளை வைத்தார்கள்.
ஜெயமோகன் தொகுப்புரை
இந்த அறிவியல் கட்டுரைத் தொகுப்பு வாயிலாக நான் என் ரசனையைத் தான் பகிர்ந்து கொள்கிறேன். அறிவியலை அத்துனை வியப்போடு அணுகுகையில் அதைத் தெரிந்து கொள்ளுதல் இலகுவாகும். நம்மில் பலர் அதை மிரட்சியோடே அணுகுகிறோம். மேலும் ஒவ்வொரு அறிவியல், தொழில்நுட்பத்திற்குப் பின்னும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு முக்கிய வரலாற்று நிகழ்வுக்குப் பின்னும் ஒரு அறிவியல் தொழில்நுட்ப மைல்கல் இருக்கிறது. பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் பின்னுள்ள அறிவியல் இரண்டையும் தேடி ரசிக்கிற என் ரசனையின் தொகுப்பே இப்புத்தகம். ஒரே ஒரு நபரை இந்தப் புத்தகம் பொருட்களின் அறிவியலை அதன் வரலாற்றை ரசிக்கும்படி மாற்றினாலும் அதை என் வெற்றியாகக் கருதுவேன்.
அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு...
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகளே அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன. ‘மகனே கைப்பிடி அளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறேதுமில்லை. இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள். உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசியில்லை, மூப்பில்லை எனவே மரணமில்லை..
தேனி மாவட்டத்தின் நிலவியல் கூறுகளான வனம், மலை, பூக்கள் எல்லாம் கவிதைகளில் கலந்து வருகின்றன. அறுபது, எழுபதுகளில் பிறந்தவர்கள் விஸ்வநாதன், KVM போன்றவர்களை விட்டு வெளிவராமல் இருப்பது போல எண்பதுகளில் பிறந்தவர்களை இளையராஜா சிறைப்பிடித்திருக்கிறார். தனக்குத் தெரிந்த நிலத்தை, பாதித்த அனுபவங்களைக் கவிதையாக்கி இருக்கிறார். அம்மு ராகவ், வாசிப்பை விடாது சிக்கெ கொள்ள வேண்டும். தொடர்வாசிப்பு கவிதைகளை எப்படி கூர்மையாக்கும் என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
أحب أن تفعل خيرا آرام سايا فيرومبو அறம் செய விரும்பு நற்செயல்களை விரும்பிச் செய் Aṟam ceya virumpu Love to do Charity சங்கத் தமிழ்ப் புலவர் ஔவையார் பாடிய ஆத்திசூடியை அரபி மொழியாக்கம்...
ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு படங்களும் ஏழு புனித நூல்கள் எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. வேறு யாருடனும் ஒப்பிட முடியாதவர் தார்க்கோவஸ்கி. அவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த ஞானம், மேதமை, இலக்கியம், இசை, ஓவியம் போன்ற மற்ற கலைகள் மீதான ஈடுபாடுகள் அவரை மேலான இடத்தில் அமர வைக்கின்றன. சில வேளைகளில் அவர் கடவுளின் தூதுவன் போலவே தோற்றம் தருகிறார். அவருடைய படங்களைப் பார்க்கக் கிடைத்ததே பெரும்பேறு எனவும் அவற்றைப் பார்ப்பது என்பது நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ளும் காரியமே எனவும் தோன்றும்.
இந்திய மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தினசரி பேசும் போது ஆயுர்வேதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் உட்பகுதியில் ஒரு மூலையில் வாழும் படிக்காதவர் கூட தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். பலர் தினமும்...
கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட்டுகின்றன. வரும் காலத்தில் தன்னை ஒரு முக்கியமான கதைசொல்லியாகத் தமிழ் மொழியில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான ஒட்டத்தில் முதல் சுற்றை முடித்துத் தொடர்கிறார் கார்த்திக் புகழேந்தி.
கலைச்செல்வியின் முதல் நாவலான சக்கைக்கும் இந்த நாவலுக்கும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், இருபது வருடங்களைக் கடந்த முதிர்ச்சி மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தில் தெரிகின்றது. நாவலின் பல இடங்களில் மொழியானது. காவேரியின் பிரவாகம் போல் பெருகி ஓட்டமெடுக்கிறது. மானிட இனத்தின் நேரங்களில் சாபங்களும் வடிவம் வரங்கள். தனிமையும், தேடலும் அவையே இந்த நாவலின் முக்கியமான கருப்பொருள்கள் இவை இரண்டுமேயாகும். கலைச்செல்வி அதற்கு கலை வடிவம் கொடுத்திருக்கிறார்.
- சரவணன் மாணிக்கவாசகம்