Description
பயராமனும் பாட்டில் பூதமும்
ஜெயராமனுக்குத் தான் காண்பது, கேட்பது கனவா, நிஜமா என்று குழப்பமாக இருந்தது.இத்தனை அழகான பெண். என்னைத் தேடி வந்து பேசுகிறாளா..? நைசாக கையைத் தொடைக்குக் கொண்டு சென்று கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அட, வலிக்கவில்லை!! கனவுதான்!!
“ஆ… ஏன் சார் கிள்றீங்க..?” என்று அலறினாள் அவள். அட, கனவில்லை!! நிஜம்தான்!!
“ஹி… ஹி… ஸாரிங்க..” என்று இளித்தான்.
“நெருக்கமா உக்காந்துக்கிட்டுக்கைல இப்டி அகலமாச் சிரிக்காதீங்க சார். பயமாருக்கு” என்றதும், பட்டென்று வாயை மூடினான்.
————————————————————-
“கடவுளே… உங்களுக்குப் பொது அறிவு இல்லையா कर्ता..?”
“பொதுவாவே எனக்கு அறிவு இல்லைன்னு தனம் சொல்லுவா. இப்ப என்ன அதுக்கு..?”
“ஜீனின்னா நீங்க நினைக்கறது இல்ல சார், நன்மை செய்யற பூதம் அது. அதைத்தான் ஜீனிம்பாங்க..” “பூ… பூ… பூதமா..?” சேரில் உட்கார்ந்த நிலையிலிருந்தே
இரண்டடி எம்பிக் குதித்து, அந்த பாட்டிலை விசிறியடித்தான் ஜெயராமன். என்ன ஆச்சரியம்! அவன் வீசியடித்த வேகத்துக்கு சுவரில் மோதிய அந்த பாட்டில் சுக்கலாய்ச் சிதறியிருக்க வேண்டும். மாறாக, ஏதோ மரத்தால் செய்தது போல சொத் என்று சத்தம் மட்டும் போட்டுவிட்டு கீழே விழுந்து..
Reviews
There are no reviews yet.