வேரும் விழுதுகளும் – ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையும், சொத்து பிரித்தல், கொடுக்கல் வாங்கல் என நகரும் கதைக்குள் கண்ணதாசன் மற்றும் கந்தசாமி என்னும் கதாபாத்திரங்கள் மூலம் கிராமத்து வாழ்வியலைச் சொன்னதுடன் விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்டத்தையும், அத்தனை கஷ்டத்திற்கும் பின்னே கிடைக்கும் ஆத்ம திருப்தியையும் மெல்லிய உணர்வுகளுடன் மயில்தோகையின் வருடலைப் போல் எழுத்தாளர் கதையில் சொல்லியிருப்பது என்னைப்போன்ற கிராமத்து அடித்தட்டிலிருந்து வந்த வாசகர்களின் உணர்வுகளை மெல்ல அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது.
தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்கள் போன்ற கிராமத்து நிகழ்வுகளில் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று கூடுவதும், தங்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதும் கொடுக்கும் ஆனந்தமும் ஆத்மார்த்த அன்பும் வேறெதிலும் கிடைப்பதில்லை. இந்நாவலை வாசிக்கையில் என் கடந்த கால வாழ்க்கை ஞாபகத்தில் வந்து போனது.
– பால்கரசு சசிகுமார்