வாசிப்பு தன் நிலை உணர வைக்கும், சக மனிதர்களை புரிய வைக்கும், மனதை விசாலமாக்கும், இவ்வுலகையே தன்னுள் காண வைக்கும், மொத்தத்தில் நம்மை “வாழ” வைக்கும்.
வாசிப்பிற்கு இணையான ஒரு தோழனை நான் இதுவரை கண்டதில்லை…. எனதொரு வாழ்வில் பலர் வாழ்வை, கண்டு, உரையாடி, உணர்ந்து, பார்வை விசாலமாகி, மனது பக்குவமாகி என என் ஒவ்வொரு புரிதலிலும் உடன் நின்றது, நிற்பது புத்தகங்களே!
-எழுத்தாளர் லதா
