Galaxy Books

புத்தகப் பார்வை : வாடிவாசல்

பரிவை சே.குமார் கேலக்ஸி பதிப்பகத்தில் புத்தகம் வாங்க :https://galaxybs.com/shop/novel/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ வாடிவாசல்… வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..? இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம். ஒவ்வொரு வாடிவாசலும் ஆயிரம் கதைகள் சொல்லும். ஆம்… அவிழ்த்து விடப்படும் மாட்டுக்கும் அதைப் பிடிக்கக் காத்திருக்கும் மனிதனுக்கும் இடையேயான சிறு தடுப்புத்தான் இந்த வாடிவாசல். மாடு உள்ளிருந்து சீறி வருவது இந்த வாசல் வழிதான். அதற்கு யார் மீதும் எந்தத் தனிப்பட்ட கோபமும் […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 32 பிரஜாபதி நீதிமன்ற அறையின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்தார். சடகோபனும் டைசனும் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்தார்கள். இரண்டு காவலாளிகள் மட்டும் கொஞ்சம் பின்பக்கம் நின்றிருக்க மற்றபடி நீதிமன்றம் காலியாகத்தான் இருந்தது. சக்சேனா நீதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தார். ”சடகோபன், எம் ஃபில் பி எச் டி. இவ்வளவு படித்திருக்கிறீர்கள், சரித்திர ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் இந்தத் தீவிரவாதம் எல்லாம்?” ”நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது? என் ஆராய்ச்சி மாணவனை அழைத்துவரும்போது ஏதோ பிழை ஏற்பட்டிருக்கிறது. டெலிபோர்ட்டிங்தான் அதற்குப் […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 31 அரங்கத்தின் பெரிய திரையில் படத்தில் பிரவீண் ஒரு நபருக்குப் பொன்னாடை அணிவித்துக்கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு குரல் “நீங்கள் இந்த இடத்துக்கு வந்ததும் பொன்னாடையை ஏற்க வேண்டும். கைகள் இரண்டையும் நேராக வைத்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவரைத் தொடவோ கைகளைக் குலுக்கவோ முனையக்கூடாது. கை குலுக்கல் பட்டயம் வழங்கிய பிறகுதான் நடைபெறும்.” என்று ஆணைகளை உதிர்த்துக்கொண்டிருந்தது. அரங்கத்தில் பெரிய பெரிய வட்ட மேஜைகளில் ஆறு ஆறு பேராகப் பலரும் அமர்ந்திருந்தனர். யாரும் அந்தத் திரையை மதித்தது […]

Shopping cart close