தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு மொழியில் புலமை இயல்பாகி விடும். மொழியின் அழகுணர்ச்சி மட்டுமல்லாமல் மொழியின் மீதான ஆளுமையும் மேம்படும். பல்வேறு விதமான வாசிப்பனுபவங்கள் மனித மனங்களிடையே மாற்றத்தையும், புதிய அனுபவங்களையும் தர வல்லவை.
தொடர்ந்த வாசிப்பினால் மொழி வசப்படுவதால் பேச்சாளுமையுமே கூட கை கூடும். நிறைய வாசிக்கையில் கலை, பண்பாடு குறித்த தெளிவும் அறிவும் மேலும் விரிவாகும். நம் மதிக்கூர்மையின் அளவு பெருக வாசிப்பும் ஒரு காரணமாக அமையுமென்பதால் வாசிப்பை நேசிப்பது ஒரு வித கடமையென்றே சொல்லலாம்.
-எழுத்தாளர்.ஆசீப் மீரான்