Galaxy Books

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 35 வெடி வெடித்த அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எந்தப்பக்கம் ஓடினால் பிழைக்கலாம், இன்னும் அடுத்தடுத்த வெடி வெடிக்குமா, எதாவது அடிபட்டிருக்கிறதா,  நாம் உயிரோடுதான் இருக்கிறோமா எதுவும் புரியாமல் யோசிக்க நேரமில்லாமல் எல்லாப்பக்கமும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நுழைவாயில்கள் அனைத்தும் தானாக மூடிக்கொண்டிருக்க கதவை உடைத்துக்கொண்டிருந்த கூட்டம், அவர்களைக் கட்டுப்படுத்துவதா, தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதா என்று புரியாமல் அவர்களை அரைமனதாகத் தடுத்துக்கொண்டிருந்த காவலர்கள், உடைந்த மேடையின் இடிபாடுகளுக்கு இடையே ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த ஆட்கள், திடீரென்று […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 34 பிரஜாபதி சிரித்துக்கொண்டே அனந்தனைப் பார்க்கத் திரும்பினார். “கடவுள். அந்தக் கருத்தாக்கத்தை ஒழிக்க எவ்வளவு பாடுபட்டோம் தெரியுமா?” அனந்தன்,”பல கடவுள்களை அழித்து, அந்தக்கடவுளாகவே பாரத் ஆகிவிட்டார். வாழ்க பாரத்.”மரணம் நிச்சயம் என்னும் சூழலிலும் அவர் மகிழ்ச்சி விநோதமாக இருந்தது. பிரவீண்,”அந்தக் கடவுளாக என்னையே ஆக்கிவிட்டார். வாழ்க பாரத்.” பிரஜாபதி கவனிக்காமல், “ஆக்குவதும் அழிப்பதும் கடவுள் வேலை என்றால் இன்று அந்த வேலையைச் செய்வது நாங்கள்தான். எங்களுக்குத் தேவை என்றால் கடவுளைக் கும்பிடவைப்போம், கலவரங்கள் நிகழ்த்தவைப்போம். அதே […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 33 பாவ்னாவும் ரிச்சர்டும் மாநாட்டு அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணி சந்திப்புக்கு எட்டரைக்கே வந்துவிட்டிருந்தாலும் யாரும் அந்த அறைக்கு வரவில்லை. யாரும் வரப்போகும் அறிகுறியும் தெரிந்திராவிட்டாலும் தயார் நிலையில் அமர்ந்திருந்தார்கள். ரிச்சர்ட்  அறிக்கையில் எழுத்துப் பிழை பார்த்துக்கொண்டிருந்தார். பாவ்னாவின் வேலையில் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது என்று தெரிந்திருந்ததுதான்.  இருந்தாலும் பொழுது போகவில்லை. பிரஜாபதி மட்டும் ஒன்பது ஐந்துக்கு உள்ளே நுழைந்தார். “மூன்று நாட்கள் முன்பே தந்திருக்கவேண்டிய அறிக்கை. […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 32 பிரஜாபதி நீதிமன்ற அறையின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்தார். சடகோபனும் டைசனும் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்தார்கள். இரண்டு காவலாளிகள் மட்டும் கொஞ்சம் பின்பக்கம் நின்றிருக்க மற்றபடி நீதிமன்றம் காலியாகத்தான் இருந்தது. சக்சேனா நீதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தார். ”சடகோபன், எம் ஃபில் பி எச் டி. இவ்வளவு படித்திருக்கிறீர்கள், சரித்திர ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் இந்தத் தீவிரவாதம் எல்லாம்?” ”நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது? என் ஆராய்ச்சி மாணவனை அழைத்துவரும்போது ஏதோ பிழை ஏற்பட்டிருக்கிறது. டெலிபோர்ட்டிங்தான் அதற்குப் […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 31 அரங்கத்தின் பெரிய திரையில் படத்தில் பிரவீண் ஒரு நபருக்குப் பொன்னாடை அணிவித்துக்கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு குரல் “நீங்கள் இந்த இடத்துக்கு வந்ததும் பொன்னாடையை ஏற்க வேண்டும். கைகள் இரண்டையும் நேராக வைத்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவரைத் தொடவோ கைகளைக் குலுக்கவோ முனையக்கூடாது. கை குலுக்கல் பட்டயம் வழங்கிய பிறகுதான் நடைபெறும்.” என்று ஆணைகளை உதிர்த்துக்கொண்டிருந்தது. அரங்கத்தில் பெரிய பெரிய வட்ட மேஜைகளில் ஆறு ஆறு பேராகப் பலரும் அமர்ந்திருந்தனர். யாரும் அந்தத் திரையை மதித்தது […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 30 சடகோபன் கதவு திறக்கப்பட்டதையும் பிரஜாபதி கோபத்துடன் உள்ளே நுழைந்ததையும் பார்த்தார். அசையவில்லை. அசைய முடியவில்லை. “உங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுவிட்டேன். வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.. ஒரு காலத்தில் மின்வழிப்பயணத்துக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடத்தியவர்.. ஆனால் மூளை என்பது கொஞ்சம்கூட இல்லை.” சடகோபன் எச்சில் விழுங்க முயற்சி செய்தார். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்ததால் முடியவில்லை. தொண்டை வலித்ததுதான் மிச்சம். “ஒரு வெடிகுண்டு நிபுணனைக் கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறீர்கள், என்ன என்னவோ பெரிய […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 29 பல்வீர் தன்னுடைய சட்டையைச் சரி செய்துகொண்டார். கழுத்துப்பட்டையைக் கட்டியபோது முதல்முறை நீளமாக வந்தது.  அடிக்கடி செய்தால் ஒழுங்காக வரும். சரி செய்து நேராகக் கட்டினார். விடுதி அறையின் வாசல் அழைப்பு மணி பாடியது. அவசரமாகத் திறக்கப் போகும் வழியில் மிதியடி தடுக்கியது. சகுனம் என்ற வார்த்தை அவர் மனதில் தோன்றியது. இந்த வார்த்தையெல்லாம் கேள்விப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது. எப்படி திடீரென்று தோன்றுகிறது? வெளியே ஒரு கருஞ்சட்டைச் சீருடை. “ஐந்து நிமிடம்.. தயாராகிவிட்டேன்.” கோட்டை […]

Shopping cart close