புத்தகப் பார்வை : கொலைஞானம் (நாவல்)
பரிவை சே.குமார் கொலைஞானம்- மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல். தான் பிறந்த நாகர்கோவில் பகுதியைக் கதையின் களமாக எடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் அவர் வலிந்து திணிக்காமல் வாசிப்பவரை ஈர்த்துக் கொள்ளும் எழுத்தில் கதை இயல்பாகப் பயணிப்பது சிறப்பு. ஆசிரியர் உரையில், ’60 லட்சம் வருடங்களுக்கு முன்பு பரிணாமத்தின் படிகளில் மனிதன் ஏறி […]