Galaxy Books

புத்தகப் பார்வை : நெஞ்சில் நிறுத்துங்கள்

கட்டுரைத் தொகுப்பு – சுரதா பரிவை சே.குமார் கவிஞர் சுரதா தொகுத்த ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’ என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது. ‘தொடுப்பவன் தன் திறமையை வெளிப்படுத்துகிறான். தொகுப்பவன் பிறர் திறமையை வெளிப்படுத்துகிறான். தமிழும் தமிழிலக்கியமும் வளர வேண்டுமானால் தொடுக்கவும் வேண்டும், பிறர் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடவும் வேண்டும். இப்போது நான் இரண்டாவது காரியத்தைச் செய்திருக்கிறேன்’ என்று தனது உதடுகளில் – முன்னுரை- சொல்லியிருக்கிறார் சுரதா. இதில் மொத்தம் […]

புத்தகப் பார்வை : செம்மீன்

தகழி சிவசங்கரப்பிள்ளை / தமிழில் – சுந்தர ராமசாமி பரிவை சே.குமார். கறுத்தம்மா,பரீக்குட்டி,செம்பன்குஞ்சு,சக்கி,பழனி – இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதைதான் ‘செம்மீன்’. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய, சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது. இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள். ‘செம்மீன்… மீனவர் சமூகத்துக்கதை. செம்பன்குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை; கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை; தனது செயல் ஒரு தியாகம் என்பதை […]

புத்தகப் பார்வை : வாடிவாசல்

பரிவை சே.குமார் கேலக்ஸி பதிப்பகத்தில் புத்தகம் வாங்க :https://galaxybs.com/shop/novel/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ வாடிவாசல்… வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..? இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம். ஒவ்வொரு வாடிவாசலும் ஆயிரம் கதைகள் சொல்லும். ஆம்… அவிழ்த்து விடப்படும் மாட்டுக்கும் அதைப் பிடிக்கக் காத்திருக்கும் மனிதனுக்கும் இடையேயான சிறு தடுப்புத்தான் இந்த வாடிவாசல். மாடு உள்ளிருந்து சீறி வருவது இந்த வாசல் வழிதான். அதற்கு யார் மீதும் எந்தத் தனிப்பட்ட கோபமும் […]

புத்தகப் பார்வை : சைக்கிள்

அழகுராஜா மதுரையில் இருந்து தேனி ,திருமங்கலம் வழியாகத் திண்டுக்கல் செல்லும் சாலையின் மத்தியில் உள்ள ஊர் ‘செக்கானூரணி’.அந்த ஊர் மக்களின் வாழ்வியலை ‘மஞ்சள் நிற ரிப்பன்’ என்னும் சிறுகதை நூலில் சொல்லி இருந்த இயக்குனர்,கவிஞர்,எழுத்தாளர் திரு.ஏகாதசி அவர்கள், தற்பாது செக்கானூரணி அருகில் இருக்கும் பன்னியான் கிராமம் கதை களமாக வைத்து இந்த சைக்கிள் நாவலை எழுதி உள்ளார். ஏன் பன்னியானைக் கதைக்களமா வைத்து இந்த நாவலை எழுதி இருக்கார்ங்கிற எண்ணம் ந,மக்குள் எழும் என்பதை மனதில் வைத்து […]

புத்தகப்பார்வை : கீதாரி

பரிவை சே.குமார் கீதாரி- சு.தமிழ்ச்செல்வி எழுதியிருக்கும் கிடை போடும் ஆட்டிடையர்கள் பற்றிய நாவல். ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அவர்களைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரிதான் கதையாய்தான் நாவல் நகர்கிறது. கீதாரி என்றால் ஆட்டிடையர்களில் தலைவரைப் போன்றவர், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்துபவர்கள். கோடைகாலங்களில் வயல்கள், கொல்லைகளில் கிடை போட்டு அந்த நிலச் சொந்தக்காரர்கள் கொடுக்கும் அற்பத்தொகையை வைத்து […]

புத்தகப் பார்வை : சலங்கை சத்தம்

அழகு ராஜா ‘மதுரை மண்ணின் மைந்தர்கள்’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் எழுதி வரும் அழகுராஜா அவர்கள் சமூக சிந்தனையுடன் செயல்படுபவர். சமூக சேவகராக மனைவி, மகனுடன் சேர்ந்து நிறையச் செய்து வருகிறார். நிறைய மரக்கன்றுகளையும் பனைமரங்களையும் நட்டு வருகிறார்கள். மரக்கன்றுகள், துணிப்பை, விதைப்பென்சிலை மதுரைப் பகுதியில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கி வருவதுடன் குறைந்த விலையில் துணிப்பைகள் விற்பனையும் செய்கிறார். எட்டு வயதில் இருந்து வாசிக்க ஆரம்பித்த தீவிர வாசிப்பாளர். புத்தக விமர்சனங்களை எழுதி […]

புத்தகப் பார்வை : நிரபராதிகளின் காலம்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் (ஜெர்மனி) / பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி (தமிழ்) பரிவை சே.குமார் நிரபராதிகளின் காலம் – ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ஜெர்மனிய ரேடியோ நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இந்திய மொழிகளில் முதல் முறையாக லென்ஸின் புத்தகம் ஒன்று மொழிபெயர்க்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற புத்தகம் இது. அதுவும் தமிழில் எனும் போது நமக்குப் பெருமைதானே. முழுக்க முழுக்க நாடகம் போல்தான் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் மாறிமாறிப் பேசிக்கொள்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நம் முன்னே அந்தப் பாத்திரங்கள் நடிக்க […]

புத்தகப் பார்வை : வேரும் விழுதுகளும்

பால்கரசு சசிகுமார் பரிவை சே.குமார் எழுதிய ‘வேரும் விழுதுகளும்’ நாவல் வாசிப்பனுவத்தை எனது வாழ்வோடு இணைத்து ஒரு வாழ்வியல் அனுபவமாய் இங்கு கொடுத்திருக்கிறேன். முக்கியமாக சொல்லவேண்டியது, இந்நாவல் தென்தமிழகத்தின் குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்றான வட்டாரப் பேச்சு வழக்கு, அந்த மொழிநடையில் சரளமாக எழுதியிருப்பது ஒரு வாசகனாய் என்னை மிகவும் கவர்ந்தது. இன்றைய நிலையில் கிராமத்து வாழ்க்கை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் பக்கம் நகர்ந்து விட்டது. வட்டாரப் பேச்சு வழக்கு, […]

புத்தகப் பார்வை : இரா.முருகவேளின் ‘முகிலினி’

பரிவை சே.குமார் முகிலினி… எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்… யார் இந்த முகிலினி…? கதையின் நாயகியா..? கதையின் களமா..? ஆம் நாயகியும் இவளே, களமும் இவளே, இவளின் இருபுறமும் மூன்று தலைமுறைகள் ஆடிய ஆட்டத்தின் வரலாறே எழுத்தாய்..! அறுபதாண்டு கால வரலாற்றை இத்தனை செய்திகளுடன் அந்தந்த காலகட்ட அரசியல் பின்னணியுடன் நிழல் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிஜ கதாபாத்திரங்களையும் இணைத்துச் சொல்லுதல் என்பது எளிதல்ல. அப்படியான வாழ்க்கையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். சிறிய நாவல்களில் இருக்கும் ஈர்ப்பு […]

புத்தகப் பார்வை : ராம் வசந்த்-ன் ‘வணிகத் தலைமைகொள்’

– வெற்றிக்கான சூட்சுமப் பெட்டகம் மு. கோபி சரபோஜி எழுத்தாளர் மு. கோபி சரபோஜி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த சமூக அக்கறைப் பதிவுகளை முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம், இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள், இஸ்லாம் கற்று தரும் வாழ்வியல், மௌன அழுகை, வினை தீர்க்கும் விநாயகர், அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு, வெற்றியைச் சொந்தமாக்குவது எப்படி?, நோபல் சிகரம் […]

Shopping cart close