இத்ரீஸ் யாக்கூப்
பிரபலமாக அறியப்பட்டவர்கள் என்றில்லாமல், புதிய மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து கைகுலுக்கி, வரவேற்று அவர்களுக்கு மேலுமொரு வெற்றிப்படியை அமைத்துக் கொடுப்பதில் கேலக்ஸி பதிப்பகம் முன் நின்று வருகிறது எனலாம்.
முகநூலில் விளையாட்டுத்தனமாக நான் எழுதத் தொடங்கியிருந்த ஒரு தொடரின் முதல் பகுதியை வாசித்துவிட்டு, இதை நீங்கள் நம்முடைய கேலக்ஸி இணையதளத்திலேயே தொடரலாமே என்ற அன்பான அழைப்பில் தொடங்கியது எனக்கும் கேலக்ஸிக்குமான இந்த அழகிய பந்தம்!
வெற்றிக்கரமாக அத்தொடர் வாசகர்களின் அபிமானத்தைப் பெற்று வந்த போதிலும் என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் அதை முழுமையாக முடித்துக் கொடுக்க முடியவில்லை; இறைவன் நாடியிருந்தால் கேலக்ஸியில் எனது இரண்டாவது புத்தகமாக ஒரு நாள் வரலாம்.
இருப்பினும் எனது தரப்பு விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து, கேலக்ஸி எப்போதுமே உங்களுக்காக தனது இரு கரங்களை விரித்துக் காத்திருக்கிறதென அருமையண்ணன் திரு. பாலாஜி பாஸ்கரன் அவர்கள் சொன்னபோது உண்மையிலேயே நான் நெகிழ்ந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பேரன்பிற்கு செய்யும் சிறு மரியாதைதான் இந்த நூல்.
பெரும்பாலான எனது கதைகள் மனித மனங்களின் நுண்ணுணர்வுகளைப் பற்றியே அதிகம் பேசுவதாக இருக்கும். ஆனால் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளும் அந்த ஒழுங்கிலிருந்து மாறுப்பட்டிருப்பது என்னளவிலேயே திருப்தியளித்த விசயம். அந்த வகையில் வாசக நண்பர்களின் எண்ணப் பகிர்வுகளுக்காக திறந்த மனதோடும் காத்திருக்கிறேன்.
நாவலுக்குப் பதிலாக என்னுடைய இந்த சிறுகதை தொகுப்பு விருப்பத்தைப் பற்றி தெரியப்படுத்திய நொடியிலிருந்து, இந்த நூலாக்கத்தில் தங்களின் அணுக்கமான அணுமுறைகளால் எப்போதும் என்னை இலகுவாகவே வைத்திருந்த மதிப்பிற்குரிய அன்பு அண்ணண் திரு. பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும், பாசமிக்க அண்ணனும் எனக்கு மூத்த எழுத்தாளருமான பரிவை சே. குமார் அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தகத்தை எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைத்து வாசக நண்பர்களுக்கும், இணைய இதழ் ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
‘மழையில் நனையாத குடை’யை வாங்கி, வாசித்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
நன்றி.
—————————————-
மழையில் நனையாத குடை
(சிறுகதைத் தொகுப்பு)
எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப்
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 180 /-
புத்தகம் வாங்க
வாட்சப் எண் : +91 9994434432
—————————————-