நலம் வாழ : கட்டுரைத் தொடர் 4 : கேள்-கவனி
ஜெஸிலா பானு நலமா? நான் நலம். இப்படிக் கேட்கவும், சொல்லவும் எல்லோருக்குமே யாராவது ஒருவராவது தேவைப்படுகிறார்கள் அல்லவா? அதுகூட இல்லையெனும் போது வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் அல்லவா? காதலன் பல கனவுகளுடன் தன் காதலியை மிகவும் ரம்யமான காதல் கசியும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த ஒரு பொருளை அவளுக்குப் பரிசளித்து, அவள் கண்ணைக் காதலுடன் பார்த்து ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லும்போது, அவள் அதைக் கவனியாமல் அந்தப் பரிசை அந்த இடத்தின் பின்னணியில் […]