Galaxy Books

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 12 – முடிவு

ஜெஸிலா பானு  உங்களுக்கு ஒரு வரம் கிடைக்குமென்றால் என்ன கேட்பீர்கள்? சட்டென்று ஒன்றை சொல்லிவிட முடியுமா? சில அதிபுத்திசாலிகள் ‘நான் கேட்பதெல்லாம் நிறைவேற வேண்டும்’ என்ற வரத்தை கேட்பார்கள். அது ஒட்டுமொத்தமாக தனக்கு வேண்டிய அத்தனையும் கிடைக்க வேண்டும் என்பதற்கான உக்தியே தவிர, குறிப்பாக ஒன்றே ஒன்று வேண்டும் என்றோ, இது மட்டும் போதும் என்றோ திருப்தியடையாத மனதை பிரதிபலிக்கிறது. இதனை முடிவெடுக்க முடியாத மனம் என்று சொல்லலாமா?  வாழ்க்கையில் இழந்துவிடவே கூடாது என்று ஏதாவது ஒன்றே […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 11 – உள்ளுணர்வு

ஜெஸிலா பானு இதுதான் நடக்கப் போகிறது என்றோ இது நடந்துவிடும் என்றோ என்றாவது உங்களுக்குத் தோன்றியது அப்படியே நடந்துள்ளதா? ’நான் அப்பவே நினைத்தேன், என் மனசுல பட்டது’ என்று என்றாவது புலம்பியிருக்கிறீர்களா? உங்களுக்கு அப்படி நடந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே அப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன.   நான், கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்ததும் அவர்கள் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ‘இந்தக் குழந்தைதான்’ அதாவது ஆண்/ பெண் குழந்தை என்று என்னால் சரியாகக் கணிக்க முடியும். […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 10 – அணுகுமுறை

ஜெஸிலா பானு எங்கள் நிறுவனத்தில் ஒரு புதிய மென்பொருளை அமலுக்கு கொண்டு வந்திருந்தார்கள். இன்றிலிருந்து இதைத்தான் பயன்படுத்த வேண்டும், அதற்கான பயிற்சி இன்னும் ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. எல்லாருமே கலந்து கொள்ள வேண்டும், சந்தேகமிருந்தால் அங்கேயே கேட்க வேண்டும், பயிற்சி முடிந்தவுடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டனர். நாங்களும் தயார் ஆனோம்.   பயிற்சி முடிந்தவுடன் பெரும்பாலானவர்கள் புதிய மென்பொருள் சரியில்லை, பயனில்லை, கடினமானது, இருக்கும் மென்பொருளே அருமையானது என்று தங்களது அதிருப்தியை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தினர். […]

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 9 – கனவு மெய்ப்பட

ஜெஸிலா பானு  முன்பெல்லாம் தினமும் கிட்டத்தட்ட 45 கி.மீ. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் பறக்கும் கார் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். என்னைப் போலவே யாரோ பறக்கும் காரை கற்பனைச் செய்து காட்சிப்படுத்தி அதனைச் செயல்படுத்தியும் இருக்கிறார்கள். விரைவில் துபாயில் பறக்கும் கார் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  கற்பனை செய்வதெல்லாம் நனவாகுமா? ஆகும். ஆனால் எப்படி கற்பனை செய்கிறோம் என்பதைப் பொருத்தது.  உங்கள் கற்பனைக் குதிரையைத் […]

Shopping cart close