Galaxy Books

கதையல்ல வாழ்வு – 4 “தோள் கொடுக்கும் தோழர்கள்”

ஹேமா  தோள் கொடுக்கும் தோழர்கள்  வெளிநாட்டு வாழ்க்கையென்பது பலரின் கனவு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றவர்கள், ஏஜென்ட் மூலமாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் என கடை நிலை முதல் எல்லா நிலைகளிலும் ஆயிரமாயிரம் கனவுகளோடு வெளிநாட்டு வாழ்க்கைக்குச் சென்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் வெளிநாட்டு வாழ்வில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பொருளாதார நிலையில் மேம்பட்டிருக்கிறார்கள். தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும், உறவினர்களையும் பொருளாதாரத்தில் மேம்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவ்வாழ்வில் எல்லோருக்கும் சமமான வாய்ப்போ […]

கதையல்ல வாழ்வு – 3 “நிஜவாழ்வின் நாயகர்கள்”

ஹேமா நாயகப் பிம்பம் என்பது நம் சினிமாக்களின் வழியாக இயல்பாக நாம் பார்க்கும் ஒன்று. திரைப்பட நாயகர்களின் மீதுள்ள அன்பு என்பது பித்து நிலைக்கு மாறும் அபாயத்தையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். திரைப்பட ஹீரோக்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், தலைவா தலைவா என்று அவர்களின் வீட்டு வாசல்களில் முன்பு கோஷமிடும் மக்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த சினிமா நாயகர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  த ரியல் ஹீரோஸ் […]

கதையல்ல வாழ்வு – 2 “ஒளிரும் கட்டிடங்களும், ஒளிந்திருக்கும் மனித உழைப்பும்”

ஹேமா  ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது. இலக்கணத்தின் செய்வினை செயப்பாட்டுவினைக்காக இந்த வாக்கியத்தைச் சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தாள் உறவினரின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் வினிதா. உண்மையில் ஷாஜகான்தான் தாஜ்மகாலைக் கட்டினாரா? உயரமான பிரம்மாண்டமான கட்டிடங்களையெல்லாம் யார் கட்டினார்கள்? அதற்காக பணம் செலவழித்தவர்களால்தானே அந்தக் கட்டிடம் கட்டட்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  என் அப்பா கட்டிய வீடு, அம்மா கட்டிய வீடு என்பது நாம் பலரும் சொல்லும் வாக்கியங்கள். அம்மா அப்பாவின் உழைத்த பணம் […]

கதையல்ல வாழ்வு – 1 “உயிர் காக்கும் ஊழியர்கள்”

ஹேமா உயிர் காக்கும் ஊழியர்கள் சம்பவம் : 1 ஆம்புலன்ஸின் சைரன் நிறுத்தப்பட்டிருந்தது. நோயாளியைச் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டு தன் ஆம்புலன்ஸ் வண்டியை நோக்கி விரைந்தார் டிரைவர் ரவி. கைகழுவிவிட்டு களைப்பாக தன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.  மணி நண்பகல் பன்னிரெண்டு ஆகியிருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்ற நினைப்பே அப்போதுதான் வந்தது. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து இட்லியை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அரை இட்லி சாப்பிட்டுக் […]

Shopping cart close