Galaxy Books

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

எழுத்தாளர் மோகன் ஜி கவிதை, கதை, நாடகம் என எழுத்திலும்… வழக்காடு மன்றம், கவியரங்கம், ஆன்மீகச் சொற்பொழிவு எனப் பேச்சிலும் தொடர்ந்து கலக்கலாய் இயங்கி வருபவர். இவரின் படைப்புகள் அமுதசுரபி, தினமணிக்கதிர்,கலைமகள், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இதுவரை ‘வானவில் மனிதன் கவிதைகள்’, ‘என் பரணில் தெறித்த பரல்கள்’, ‘பொன்வீதி’, ‘தொழுவத்து மயில்’ மற்றும் ‘ஸ்வாமி ஐயப்பன்’ பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார். மூன்று புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். வலைப்பூ […]

சிறுகதை : சொல்லத் துடிக்குது மனசு

கவிஞர் தமிழ்க்காதலன் கவிஞர் தமிழ்க்காதலன் மரபுக் கவிதைகளே அதிகம் எழுதுவார். நண்பர்களுடன் இணைந்து ‘தமிழ்க்குடில்’ என்ற அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய பிள்ளைகளுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். சினிமாவில் பாடல் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தாலும் ஊரில் விவசாயம் செய்வதை மிகவும் விரும்புவதால் தற்போது முழுநேர விவசாயியாக இருக்கிறார். கவிஞர் எழுதிய முதல் சிறுகதை இது.****** காதல் என்பது என்ன..? உணர்வா…? உணர்ச்சியா…? பருவமா..? பக்குவமா..? வருவது தெரியாமல் வந்து உயிர் குடிக்கும் மதுவா..? வந்து அமர்ந்து […]

புத்தகப் பார்வை : வேரும் விழுதுகளும்

பால்கரசு சசிகுமார் பரிவை சே.குமார் எழுதிய ‘வேரும் விழுதுகளும்’ நாவல் வாசிப்பனுவத்தை எனது வாழ்வோடு இணைத்து ஒரு வாழ்வியல் அனுபவமாய் இங்கு கொடுத்திருக்கிறேன். முக்கியமாக சொல்லவேண்டியது, இந்நாவல் தென்தமிழகத்தின் குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்றான வட்டாரப் பேச்சு வழக்கு, அந்த மொழிநடையில் சரளமாக எழுதியிருப்பது ஒரு வாசகனாய் என்னை மிகவும் கவர்ந்தது. இன்றைய நிலையில் கிராமத்து வாழ்க்கை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் பக்கம் நகர்ந்து விட்டது. வட்டாரப் பேச்சு வழக்கு, […]

தொடத்தொட தொடர்கதை நீ…. – 3

ஆர்.வி.சரவணன் முன்கதை : காதல் பிரச்சினையால் ஊருக்கே வராத மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக, அதே நேரம் எதேச்சையாக அவளின் அப்பா மீது மோத, பழைய நினைவுகள் வந்து போகின்றன. அவர் மிரட்ட, இவனோ என்ன செய்துவிடுவாய் என்பதாய் எதிர்த்துக் குரல் கொடுக்க, அவனைத் தேடி இளைஞன் ஒருவன் வருகிறான். **** இனி… மாதவன் சொன்ன […]

புத்தகப் பார்வை : இரா.முருகவேளின் ‘முகிலினி’

பரிவை சே.குமார் முகிலினி… எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்களின் எழுத்தில்… யார் இந்த முகிலினி…? கதையின் நாயகியா..? கதையின் களமா..? ஆம் நாயகியும் இவளே, களமும் இவளே, இவளின் இருபுறமும் மூன்று தலைமுறைகள் ஆடிய ஆட்டத்தின் வரலாறே எழுத்தாய்..! அறுபதாண்டு கால வரலாற்றை இத்தனை செய்திகளுடன் அந்தந்த காலகட்ட அரசியல் பின்னணியுடன் நிழல் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிஜ கதாபாத்திரங்களையும் இணைத்துச் சொல்லுதல் என்பது எளிதல்ல. அப்படியான வாழ்க்கையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். சிறிய நாவல்களில் இருக்கும் ஈர்ப்பு […]

சிறுகதை : உலை வாய்

பால்கரசு சசிகுமார் காரைக்குடியைச் சேர்ந்த பால்கரசு சசிகுமார் பணி நிமித்தம் அபுதாபியில் இருக்கிறார். பிறந்தது இராமநாதபுரம் மாவட்டம் என்பதால் அப்பகுதி கிராமத்து மக்களின் வாழ்வியல் கதைகள் இவரிடம் ஏராளம் உண்டு. வாழ்வியல், அரசியல் எனச் சின்னச் சின்ன பதிவுகளாய் முகநூலில் எழுதி வருபவர். இது இவரின் முதல் சிறுகதை. தொடர்ந்து இது போன்ற வாழ்வியல் கதைகளை எழுதுவார் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் எழுத்து. ******* எப்பவும் வெள்ளையும் சொள்ளையுமாய் இருக்கும் கந்தசாமியைத்தான் அந்த ஊர் பார்த்திருக்கிறது. அவரும் […]

கட்டுரை : பாராட்டுங்கள்… பாராட்டப் பெறுவீர்கள்..!

நத்தம் எஸ். சுரேஷ்பாபு இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது சந்திக்கிறது. மற்றவர்கள் பாராட்டுக்கு ஏங்கும் அது வசை கேட்கும் போது சுருங்கி விடுகிறது. எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தில் இருக்க மனிதன் மட்டுமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் ஏங்குகிறான். ஆறறிவு படைத்த மனிதனின் ஆசையே பாராட்டு. ஒவ்வொரு சின்ன செயலையும் ஒருவித எதிர்பார்ப்புடனே செய்யும் மனிதன் […]

புத்தகப் பார்வை : ராம் வசந்த்-ன் ‘வணிகத் தலைமைகொள்’

– வெற்றிக்கான சூட்சுமப் பெட்டகம் மு. கோபி சரபோஜி எழுத்தாளர் மு. கோபி சரபோஜி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த சமூக அக்கறைப் பதிவுகளை முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம், இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள், இஸ்லாம் கற்று தரும் வாழ்வியல், மௌன அழுகை, வினை தீர்க்கும் விநாயகர், அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு, வெற்றியைச் சொந்தமாக்குவது எப்படி?, நோபல் சிகரம் […]

தொடத் தொட தொடர்கதை நீ….-2

ஆர்.வி.சரவணன் முன்கதை : காதல் பிரச்சினையால் ஊருக்கே போகாத கதைநாயகன் மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் ஊருக்கு வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக, இங்கே ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாதென நினைத்தபடி திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ஒருவர் மீது மோத, அவரை ஏறிட்டுப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. **** மாதவன், யார் மீது மோதி கொண்டானோ அவரை நிமிர்ந்து […]

கட்டுரை : நம்பினால் நடக்கும்

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு மாவீரன் அலெக்சாண்டர் உலகத்தை வென்று வரப்புறப்பட்ட போது தம் சொத்துக்களையெல்லாம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது ஒருவர், ‘எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு என்னதான் மிஞ்சபோகிறது?’ என்று கேட்டார். ‘நம்பிக்கை’ என்ற ஒரே சொல்லில் பதில் சொன்னார் அலெக்சாண்டர் ஆம் அவர் தன்னை நம்பினார். வென்று காட்டினார். நம்பினால் எதுவும் நடக்கும்.ஆகவே எந்த ஒரு செயலிலும் எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை எனும் போது அதனை இழந்தால் வாழ்க்கையையும் இழப்பது போலத்தானே? […]

Shopping cart close