Galaxy Books

படித்ததில் பிடித்தது : ஆச்சிமார் வாதம்

கவியரசு கண்ணதாசனின் கவிதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் தன் மண்ணின் ஆச்சிமார் (மாமியார் – மருமகள்) வாதத்தை மிக அழகான கவிதையாக ஆக்கி வைத்திருக்கிறார். முந்தைய தலைமுறையின் பழமைகளைத் தேடி எடுத்துத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வரும் தேவகோட்டை நண்பர் காளிதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த கவிதை இது. கவிதையின் அழகுக்காகவே உங்கள் வாசிப்பிற்காக ‘படித்ததில் ரசித்தாய்’ இங்கே… செட்டிநாட்டு மாமியாரின் வாதம் நல்லாத்தான் சொன்னாருநாராயணச் செட்டி! பொல்லாத பெண்ணாகபொறுக்கி வந்து வச்சாரு […]

சிறப்புச் சிறுகதை : நிகழ்காலங்கள்

பேராசிரியர். முனைவர். மு.பழனி இராகுலதாசன் மயில் இறகுகளையும் பிலிம் துண்டுகளையும் தீப்பெட்டிப் படங்களையும் சிலேட்டுக் குச்சிகளுக்கு விற்பனை செய்து கொண்டும் , வாங்கிக் கொண்டுமாய்த் தீவிரமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வகுப்புப் பையன்களை வாத்தியாரின் கடுமையான அதட்டல்குரல் நிமிர்ந்து பார்க்கச் செய்தது. “ரெண்டு ரெண்டு எருவராட்டி எல்லோரும் கொண்டாந்தீங்களா?” நாற்காலியில் சாய்ந்து, குத்துக்காலிட்டுக் கொண்டு, குடும்பப்பாசம் நிறைந்த ஒரு ‘வாராந்தரி’யின் அட்டையைப் பார்த்தபடியே சத்தம் போட்ட வாத்தியாரைப் பையங்கள் எல்லோரும் ஏககாலத்தில் தலைதூக்கிப் பார்த்தார்கள்.பாடம் சம்பந்தப்பட்டதோ, அல்லது ஊர்-உலக […]

புத்தகப்பார்வை : ஓநாய் குலச்சின்னம்

ஆசிரியர் : ஜியாங்க் ரோங் , தமிழில் : ஜி.மோகன் எழுதியவர் : எழுத்தாளர் பால்கரசு சசிகுமார், அபுதாபி சீன மொழியில் எழுதப்பட்டு, பிரபலமான ‘wolf totem’ என்ற நாவலை திரு. சி.மோகன் அவர்கள் ‘ஓநாய் குலசின்னம்’ என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்நாவல் மங்கோலிய மேய்ச்சல் நில மக்களின் பின்னணிக் கதைகள் மற்றும் சீன விளைச்சல் நில மக்களால் சுற்றுப்புற சூழல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகிறது. மங்கோலிய மக்களின் […]

புத்தகப் பார்வை : மரப்பாலம்

கரன் கார்க்கி மரப்பாலம்… இன்றைய நிலையில் அதிகமாகப் பணத்தைச் சுருட்டாமல் கட்டுகின்ற சிமெண்ட் பாலங்கள் கூட சில வருடங்களிலேயே பல்லைக் காட்ட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியிருக்கும் போது மரப்பாலம்..? அதுவும் மழை வெள்ளம் நிறைந்து ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டும் மரப்பாலம்…? பல உயிர்களைக் காவு வாங்கி… காவு வாங்கி… மீண்டும் மீண்டும் உயிர்தெழும் மரப்பாலம் முழுமையாக கட்டப்பட்டதா..? ஜப்பானியர்கள் நினைத்தபடி அதில் இரயில் பயணத்தைத் தொடர்ந்தார்களா…? அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கு உடைந்ததா…? என்பதையெல்லாம் […]

புத்தகப் பார்வை : சோளகர்தொட்டி

‘நான் பிணம்’ ‘நீயும் கூடத்தான் மாதேஸ்வரா…’ இந்த புத்தகத்தை வாங்க : https://galaxybs.com/shop/essay-and-articles/literature/solagar-thotti/ இந்த இரண்டு வரிகளும் போலீஸ் மிருகங்களின் காமப்பசிக்கு இரையான மாதியின் மனசுக்குள் வெடித்துப் பிறந்து இன்னும் என் மனசுக்குள் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. சோளகர் தொட்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறும் மனசுக்குள் இந்த வரிகள் அடிக்கடி மேலெழுந்து தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தாக்கத்தில் தனித்து நிற்கிறேன்… வேறேன்ன செய்ய..? படிக்கும் காலத்தில் டீக்கடை தினத்தந்தியில் எப்படியும் ஒரு […]

இல்லாதவர்கள் என்று எவருமில்லை – ஜெஸிலா பானு

ஜெஸிலா பானு இல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஏதாவதொன்று எல்லாரிடத்திலும் இருக்கதான் செய்கிறது. எனக்குத் தேவையில்லாதது வேறொருவருக்கு அவசியமானதாக இருக்கலாம். அவருக்குத் தேவையற்றது என்று கருதுவது மற்றவருக்கு வேண்டியதாகிவிடலாம். எல்லோரிடமும் ஏதோ ஒரு தேவையற்றது மற்றவருக்குத் தேவையானதாக இருக்கதான் செய்கிறது. இன்று நமக்குத் தேவை என்று வாங்கிய பொருள் சில காலம் கழித்துத் தேவையற்றதாகிவிடும். அப்படியாகும் போது அதனைத் தேவையில்லாமல் வீட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக இன்னாருக்கு உதவக் கூடுமென்று நினைப்பவருக்குக் கொடுத்து விடலாம். அல்லது கொடுப்பவருக்குக் கொடுத்தால் வேண்டுபவருக்குப் […]

முதல்ல கிச்சன்ல இருந்து வெளில வாங்க – சென் பாலன்

மருத்துவர் சென் பாலன் தமிழ்நாட்டு உணவுப் பழக்கவழக்க முறையின்படி சாப்பிட வேண்டுமானால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவர் தினசரி எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் அடுக்களையில் உழைத்து சமைக்க வேண்டும். அலுவலகத்திற்குச் சென்று எட்டு மணி நேரம் கடும் பணி செய்வதற்கு ஒப்பானது அது. இவை இல்லாமல், காய்கறி மளிகை பொருட்கள் வாங்குவதற்கான நேரம் தனி. என்ன சமைக்கலாம் என யோசிப்பதில் வீணாகும் நேரம் தனி. மசாலா பொருட்கள், பொடி வகைகள் அரைப்பதற்கான நேரம் தனி. […]

Shopping cart close