இளைய பாரதத்தினாய்…
மோகன் ஜி மும்பையில் சௌபாத்தி கடற்கரை… பிரதான சாலையின் நடைபாதைக்கு வரப்பு கட்டியதுபோல் ஒன்றரையடி சுற்றுச்சுவர். சாலைக்கு முதுகுகாட்டி சுவரின்மேல் அமர்ந்திருக்கிறேன். பலநேரம் இந்தச்சுவரில் முட்டிக் கொண்டுதான் என் கவிதைகள் கண்விழிக்கின்றன. எதிரே நீண்ட மணல்வெளி. அதைத் தாண்டி வெள்ளலை சரிகையிட்ட நீலக்கடல். அதைத் தாண்டியும் விரியும் மனவெளி. இன்று கவிதை எழுதும் மனநிலை மூட்டம் போட்டிருந்தது. ஒழுகிச் செல்லும் சுகமான பேனா என்னிலிருந்து வரிகளைப் பிரித்து தாளில் ஒற்றியபடி…. அருகே நீலப்பதாகை விரிப்பு போல் பார்வையின் […]