Galaxy Books

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-12 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9அத்தியாயம்-10அத்தியாயம்-11 பிரியாவை பார்த்தவுடன் ஒரு கணம் திடுக்கிட்டார் மூர்த்தி. “சின்னப் பொண்ணு நீ. எவ்வளவு வேதனைய தான் தாங்குவேனு தான் சொல்லல” கௌரி சொன்னாள். “உங்களுக்குச் சந்தோசம் வர்றப்ப என்னை விட்டுட்டு கொண்டாடுவீங்களாப்பா” “இல்லம்மா” “பின்னே கஷ்டத்துல என்னையும் சேர்த்துக்குங்க” “நான் பட்ட அவமானம் இது. எப்படிம்மா சொல்வேன்”மூர்த்தி சோர்வாய் பதிலளித்தார். “எது எப்படியோ யாரோ எடுத்துகிட்ட பணத்துக்கு நாம தண்டனை அனுபவிக்கும்படி ஆகிடுச்சு. என் கல்யாணத்துக்காக […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 4 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3 “நான் நினைச்சது சரிதான். நீ கர்ப்பமா இருக்கே சுப்ரியா”, ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு டாக்டர் உறுதிப்படுத்த, எதிரே அமர்ந்திருந்த சுப்ரியாவிற்குள் இனம்புரியாத உணர்ச்சிகள். என்னவென்று விளக்கிவிட முடியாத உணர்வுகள். ஒரு பக்கம் சந்தோஷமும், மறுபக்கம் துயரமுமாக அவள் இதயம் இழுபட்டது. கிழிபட்டது. கண்கள் கரித்தன. நினைவுகள் அஷோக்கைப் பற்றித் தாவத்தான் எங்கிருக்கிறோம் என்பதே ஒரு கணம் மறந்து போனது சுப்ரியாவுக்கு. “சுப்ரியா..! ஆர் […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 3 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 ******************* என்ன பிரச்சினைகள்… என்ன சிக்கல்கள் வந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் யாரையும் விட்டு வைப்பதில்லை. விடாமல் துரத்தியடிக்கும். அப்படித்தான் இருந்தது அஷோக்கிற்கும். கோர்ட் கேஸ் என்று முந்தின நாள் மண்டையை பிளக்க வைத்தன கவலைகள். அதற்கு அடுத்த நாள் திறக்கப்பட வேண்டிய அவன் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை அவனை துரத்தியது. இரவு முழுவதும் தூங்கவில்லை அவன். கண்கள் எரிந்தன. உடல் முழுக்க […]

மக்களைக் கொல்லும் மது

பால்கரசு சசிகுமார் நேற்றுவரை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் குடும்பத்திற்காக அந்நிய தேசத்தில் பொருளீட்ட ஓடிக்கொண்டிருந்தவர்கள், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இன்று உருகுலைந்து, உடல் செயல் இழந்து நிற்பதைப் பார்க்கும்போது அதிர்ந்து போகிறேன். எது வாழ்வு என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் குடிப் பழக்கத்தால் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வதுடன் தன் குடும்பத்தையும் சேர்த்தே வதைக்கிறார்கள்! கடந்த இரண்டு வருடங்களில் இருபதிற்கும் மேற்பட்ட என் நெருங்கி நண்பர்கள் இந்தப் பாழாப்போன குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி குறைந்த வயதில் உடல் செயல் […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-11 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9அத்தியாயம்-10 மதன் முறைத்த படி காரிலிருந்து இறங்கப் போனான். விக்கி அவனை தடுத்து தடாலடியாக காரை விட்டு இறங்கினான். “என்ன மறுபடியும் தகறாருக்கு வந்திருக்கியா..?” சிடுசிடுப்பாய் முத்துவின் அருகே சென்றான். முத்துவின் பின்னாலிருந்து இறங்கிய அவனது அம்மா “கோச்சுக்காதீங்க தம்பி. அப்படிலாம் ஏதும் இல்ல.” என்றாள் தடுக்கும் விதமாக. “பின்ன ஏன் மோதுற மாதிரி வந்து வண்டிய நிறுத்தறான்..?” “இதே வார்த்தைய நானும் கேட்கலாம்ல” முத்து கேட்டான். […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் : 2 கல்பனா சன்னாசி முதல் அத்தியாயம் வாசிக்க : அத்தியாயம்-1 ****************************** மருத்துவமனைக்கே உரிய பிரத்யேகமான ஒரு வினோத வாசனை அந்த அறையையும் விட்டு வைக்கவில்லை. அறைக்குள்ளிருந்த கட்டிலில் அறுந்து விழுந்த கொடியாக துவண்டு கிடந்தாள் சுப்ரியா. மயக்கம் தெளிந்திருந்தது. ஆனாலும் முகம் முழுக்க சோர்வு. “சாதாரண மயக்கம்தான். பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை.” சுப்ரியாவின் கையைப் பிடித்து, மார்பின் மேல் ஸ்டெத்தை வைத்துப் பரிசோதித்தபடியே கூறினார் லேடி டாக்டர். சுப்ரியா வழக்கமாக பார்க்கும் தெரிந்த டாக்டர்தான். […]

முதுமை போற்றுவோம்

இன்றைய இளமை நாளைய முதுமை என்பதை நாம் யாருமே நினைவில் கொள்வதில்லை. பெற்றோராக இருக்கட்டும்… உறவினராக இருக்கட்டும்… பழகியவராக இருக்கட்டும்… ஏனோ முதுமையை மதிக்க நாம் மறுக்கிறோம். அவர்கள் என்ன சொன்னாலும் ‘பெருசுக்கு வேற வேலையில்லை’ ‘கிழடு அப்படித்தான் கத்தும்’, ‘வயசாயிட்டாலே நையி நையின்னு’ என்று பலவாறு அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி அவர்களுடன் சேர்த்து அவர்களின் கருத்துக்களையும் மூலையில் கிடாசுகிறோம் . இளம் பிராயத்தில் அவர்களும் நம்மைப்போல்தான் இருந்திருப்பார்கள். நாம் செய்யும் சேட்டைகளையும் உதாசீனங்களையும் அவர்களும் […]

ரோசாப்பூ துரை

மார்ச்-05. மதுரை மக்கள் கொண்டாடும் ஒரு நிஜ நாயகனின் நினைவு தினம். ரோசாப்பூ துரை என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உற்ற நண்பரும் விடுதலை போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான ஜார்ஜ் ஜோசப். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதுரை வட்டாரத்தில் குறிப்பிட்ட சமூக மக்களை குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தி, சட்டம் கொண்டு வந்து இழிவுபடுத்தியபோது அச்சமூக மக்களுக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர். அது மட்டுமல்ல, அந்தக் காலத்திலயே தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர். மகாத்மா காந்தியின் […]

காதல் திருவிழா

கல்பனா சன்னாசி எழுத்தாளர் கல்பனா சன்னாசி – சென்னைக்காரரான இவர் தீவிர வாசிப்பாளர் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்துச் சிறுகதைகள் எழுதி வருபவர். ‘தங்கச்சி கல்யாணம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது. சென்ற ஆண்டு கேலக்ஸி நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளுடன் புத்தகத்தில் இடம்பெறத் தேர்வாகி, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட ‘தோப்பு’ சிறுகதைத் தொகுப்பில் இவரின் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்னும் சிறுகதையும் ஒன்று. இவரின் முதல் நாவலை கேலக்ஸியில் தொடராய் […]

புத்தகப் பார்வை :கதையல்ல வாழ்வு

பரிவை சே.குமார் ——————————————————————————————————————–கேலக்ஸி இணையதளம் வழி வாங்க : கதையல்ல வாழ்வு——————————————————————————————————————– கதையல்ல வாழ்வு இது எளிய மனிதர்களின் வாழ்க்கைக் கதை அல்ல வாழ்க்கை, வாக்கு மூலம். ஒரு கதையோ கட்டுரையோ எழுதும் போது நாம் மனதில் தோன்றுவதை எழுத்தில் கொண்டு வந்துவிட முடியும் ஆனால் இதிலிருக்கும் கட்டுரைகள் அப்படியானவை அல்ல. ஒவ்வொரு கட்டுரைக்கும் சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசியிருப்பதால் அவர்களுடன் பேசி, அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருப்பது என்பது சாதாரண விசயமில்லை. அதில் […]

Shopping cart close