Galaxy Books

ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய கவிதைப்போட்டி – 2024

அன்புள்ளவர்களே…. உங்களைத் தான். முதற்கண் நற்றமிழ் நல் வணக்கம். அதிகாலைக் குயிலின் ஆனந்தக் குரலிசையை அழகின் சொற்களால் அளிக்கமுடியுமா உங்களால்..? மேகமே சிலிர்த்திறங்கி வர, மயிலாடும் நடனத்தை அப்படியே தமிழின் தூரிகைச் சொற்களில் தர முடியுமா உங்களால்..? வறுமை புசிக்கும் பசியை வார்த்தைகளில் படம் எடுக்கத் தெரியுமா உங்களுக்கு..? நிலவொளிப் பால்சோற்றை நினைவேட்டில் குறித்திருக்கிறீர்களா..? முரண்பாடுகளாலான மானுடத்தின் முகவரியைச் சொல்ல முடியுமா உங்களால்..? அறியா சனங்களுக்கும் அரியாசனங்களுக்குமான அடிப்படையை அறிந்தவரா நீங்கள்..? மலை உச்சிக்கும் பள்ளத்தாக்குக்கும் இடைப்பட்ட […]

‘வாத்தியார்’ – விமர்சனக் கூட்டம்

பரிவை சே.குமார். சனிக்கிழமை (27/07/2024) மாலையை இனிமையாக்கிய கேலக்ஸியின் இரண்டு நிகழ்வுகளில் முதலாவதாய் ‘மூக்குக் கண்ணாடி’ வெளியீடு முடிந்தபின் இரண்டாவதாய் எனது ‘வாத்தியார்’ சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. வாத்தியார் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் முதல் விமர்சனக் கூட்டம் நேற்றுத்தான் நடைபெற்றது. பாலாஜி அண்ணன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். முதலில் பேச வந்த சகோதரர் பால்கரசு கையில் நாலைந்து பேப்பர் இருந்தது. எழுத்தாளர் சிவா என்னங்க பேப்பர்ல பிரிண்ட் அவுட்லாம் […]

மூக்குக் கண்ணாடி – புத்தக வெளியீடு

-பரிவை சே.குமார். சனிக்கிழமை மாலை கேலக்ஸி பதிப்பகம் இரு நிகழ்வுகளை ஒருங்கே நடத்தியது. அதில் முதல் நிகழ்வாக எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களின் நாவலான ‘மூக்குக் கண்ணாடி’யின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. புத்தகம் சார்பான கூட்டம் என்பது எப்போதுமே மனசுக்கு நிறைவாக இருக்கும். அதற்காக அபுதாபியில் இருந்து நாங்கள் துபைக்குப் பயணிக்கும் போது நிறைய விஷயங்களைப் பேசியபடி பயணிப்பது ஒரு சுகம் என்றால் நிகழ்வில் நண்பர்களைச் சந்திப்பதும் அளவளாவுவதும் அதைவிடச் சுகமான அனுபவமாக இருக்கும். நீண்ட நாட்களாக […]

அத்தியாயம் – 4 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர் திப்பு ரஹிம் ————————————————– முந்தைய பகுதிகளை வாசிக்கஅத்தியாயம் – 1அத்தியாயம் – 2அத்தியாயம் – 3————————————————– மக்காவிலே ஒரு கொள்கையை 12  ஆண்டுகளாக சொல்லி வந்தவர்களை அடக்குமுறைப்படுத்தி விரட்டி அடித்தார்கள். அவர்களை அப்படியே விட்டிருந்தால் அந்த ஒரு கொள்கை ஒரு மதமாக மட்டும் இருந்திருக்கும். விரட்டி அடித்ததற்கு பின்பாகவும் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று நினைத்து போனவர்களை ஒழித்துக் கட்டினார்கள். ஆம் சாதுவாகத் துறவறம் மேற்கொண்ட நபிகள் நாயகம் அவர்களை இன்று ஆயுதத்தை தூக்க […]

நாவல் நிலமும் போட்டி நிகழ்வின் பரிமாணங்களும்

(அப்துல் அஹத் நினைவு உலகளாவிய குறு நாவல் போட்டி-2024-ஐ முன்வைத்து) துரை. அறிவழகன்(முதல் பரிசு பெற்ற எழுத்தாளர்) “உணர்ச்சிதான் கலையின் அடிப்படை. உணர்ச்சிப் பெருக்கை ஒதுக்கித் தள்ளிய எழுத்துக்கள் வறட்டுக் கட்டுரைத்தனமாகவே காட்சி பெறுகிறது. உணர்ச்சி இன்றி கலையும் இல்லை, வாழ்வும் இல்லை” என்பார் எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்கள். “கேலக்ஸி பதிப்பகம் நடத்திய, ‘அப்துல்  அஹத் நினைவு முதலாமாண்டு உலகளாவிய குறுநாவல் போட்டி-2024’ என்ற அறிவிப்பைப் பார்த்த போது எனக்குள் இனம்புரியாத பரவசம் தொற்றிக் கொண்டுவிட்டது. […]

அத்தியாயம் – 3 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர் திப்பு ரஹிம் ————————————————– முந்தைய பகுதிகளை வாசிக்கஅத்தியாயம் – 1அத்தியாயம் – 2————————————————– மக்காவிலிருந்து ஒரு பெரும் படை மதினாவை நோக்கி வருகிறது என்பதை அறிந்து கொண்ட நபி அவர்கள் ஊருக்குள் அவர்கள் வராமல் தடுக்க வேண்டும் என்று தன் மக்களிடம் சொன்னதால், 313 பேர்களைக் கொண்ட ஒரு சிறிய இஸ்லாமியப் படை மதினாவிற்கு வெளியே பத்ரு என்னும் இடத்தில் காத்திருந்தது. இதுவரை ஆன்மீக தலைவராக இருந்த முகமது நபி அவர்கள் இன்று தளபதியாக […]

அத்தியாயம் – 2 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர் திப்பு ரஹிம் ————————————————– முந்தைய பகுதிகளை வாசிக்கஅத்தியாயம் – 1————————————————– ‘ஏற்றத் தாழ்வுகளை ஒரு போதும் அனுமடிக்க முடியாது’ என்பதில் உறுதியாக இருந்த நபி அவர்கள் சிறிது காலத்திலேயே இனவெறி, நிறவெறி, மொழிவெறிக் கொள்கைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்தார். அங்கிருந்த அடிமைகளில் மிக முக்கியமான ஒரு மனிதர் பிலால் (ரலி). அவர் உமையா என்னும் ஒரு முதலாளியின் அடிமையாக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்ததும் அவரை வெற்றுடலுடன் சுடு […]

அத்தியாயம் – 1 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர் திப்பு ரஹிம் முகவுரை மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இதற்கு முன்பாக நடந்த சரித்திரங்கள் சரியாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாட்டுடைய தலைவராக, ஒரு குழுவினுடைய தலைவராக, ஒரு வீட்டினுடைய தலைவராக இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தான் வளர்ந்த, தான் வாழும் முந்தைய தலைமுறையில் நடந்த சம்பவங்களும் சரித்திரங்களும் தெரிந்து இருக்கும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். சரித்திரங்கள் தெரியாமல் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள் தோல்விகளில்தான் முடியும். […]

Shopping cart close