தீபாவளி சிறப்புச் ‘சிறு’ கதைகள்
பரிவை சே.குமார். ‘சிறு’ கதை – 1 : டிரஸ் தீபாவளிக்கு அப்பா ரெண்டு டிரஸ், அம்மா ஒரு டிரஸ், தாத்தா பாட்டி ஒரு டிரஸ் என நான் கு புது வரவுகளால் சந்தோஷத்தில் திளைத்த ரகு, எடுத்து எடுத்துப் பார்த்து சந்தோஷப்பட்டான். தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருக்காமல் வெளியே விளையாட ஓடிய ரகுவை, ‘தெருப்பயக கூட விளையாட போகாதே… வீட்ல வீடியோ கேம் விளையாடு… அப்பா வந்தா அடிப்பாரு’ என்று கடிந்து […]