வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
————————————————–
யூதர்களை கிறிஸ்தவ ரோம அரசர்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்றிய பொழுது அவர்கள் அனைவரும் தஞ்சம் புகுந்த இடம் மதினாவை சுற்றி இருக்கக்கூடிய இந்த இடங்கள் தான்.
அப்போது மதினாவில் இருந்த அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுக்கு இடையே பகை இருந்தது. ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள். நபியவர்கள் மதினாவிற்கு வந்ததும் அவர்கள் பகைமையை மறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அன்சாரிகளாக மாறிவிட்டார்கள். இதுவும் பெரிய ஏமாற்றமாக அங்கிருந்த யூதர்களுக்கு இருந்தது.
ஆனாலும் கிறிஸ்தவர்களிடமிருந்து தப்பித்து வந்தவர்களை மதினாவாசிகள் மிகவும் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடன் நடத்தினார்கள். அதேபோல நபியவர்களும் ‘மூசா நபியின் சந்ததியர்’ என்றும் ‘வேதம் கொடுக்கப்பட்டவர்கள்’ என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.
ஒரு நேரத்தில் நபியவர்களை கொல்வதற்கு அவர்களில் சில கோத்திரங்கள் திட்டம் தீட்டினார்கள். அதை அறிந்துக் கொண்ட பொழுது அவர்களை மதினாவில் இருந்து வெளியேற்றினார்கள். அப்படி வெளியேறிப் போனவர்கள் தான் இன்று குறைஷிகளைத் தூண்டிவிட்டு அவர்களுடன் சேர்ந்து மதீனாவை அழிப்பதற்கு வந்திருந்தார்கள்.
அந்த எதிரிகளுடன் தான் மதினாவின் பக்கத்திலேயே இருந்த இன்னொரு யூத கூட்டமான பனுகுரைலாவும் கைகோர்த்து இருந்தார்கள். அவர்கள் அங்கிருந்து தாக்கும் பொழுது இவர்கள் ஊருக்குள் தாக்க வேண்டும்! என்பதே இவர்களுக்கு எண்ணமாக இருந்தது.
படையெடுத்து வந்தவர்களின் எண்ணம் பலிக்காமல் அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பி விடவே, தங்களுடைய நம்பிக்கை துரோகமும் நபி அவர்களுக்குத் தெரிந்து விட்டதால் என்ன நடக்கப் போகிறதோ! என்ற அச்சத்தில் தங்கள் கோட்டைக்குள் சென்று கோட்டையை அடைத்துக் கொண்டு உள்ளே பதுங்கி விட்டார்கள்.
மதீனாவாசிகளுக்கு இவர்கள் மீது கடுமையான கோபம் இருந்தது. மதினா திரும்பிய நபியவர்களும் தங்கள் படையை உடனடியாக பனு குறைலா கோட்டையை முற்றுகையிட்டார்கள். கிட்டத்தட்ட 25 நாட்கள் முற்றுகை நடந்தது.
கடைசியாக அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரானார்கள். அப்போதும் கூட நபியவர்களிடம் பேச மறுத்து விட்டார்கள். வெளியூரிலிருந்து வந்தவர்களின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்றார்கள்.
நபி அவர்கள் மிகவும் கருணையும் மன்னிக்கும் குணத்தையும் கொண்டவர்கள். தனக்கு தீமை செய்த அத்தனை பேரையுமே இதுவரை அவர்கள் மன்னித்து தான் இருந்தார்கள். கைபரில் ஒரு பெண் விருந்து வைத்த பொழுது, ஆட்டு இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து விட்டாள்.
முதலில் சாப்பிட்ட நபி அவர்கள் வாயில் போட்டதும் விஷம் கலந்திருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு துப்பி விட்டு தோழர்களையும் சாப்பிட வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற பொழுது அந்தப் பெண்ணை மன்னித்தார்கள். ‘அந்த விஷத்தன்மை அவர்களுக்கு நாவிலே நீண்ட நாள் இருந்தது’ என்று ஹதீஸ் புத்தகத்தில் உள்ளது.
இப்படி கருணையும் மன்னிக்கும் குணமும் கொண்ட நபிகளாருடைய தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம்” என்று மமதையில் நின்றார்கள்.
மேலும் “எங்களுக்கு மதினாவின் தலைவர் தான் தீர்ப்புத்தர வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள்.
அதை ஏற்றுக் கொண்ட நபிகளார் மதினாவின் தலைவர் ‘சஅது பின் முஆத்’ அவர்களை அழைத்து வரச் சொன்னார்கள். எதிரிகள் எய்த அம்பு ஒன்று ஏற்கனவே அவர்களுடைய கையிலே தைத்து அதிக இரத்தப் போக்கினால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை அங்கு அழைத்து வந்தார்கள்.
தலைவருக்கு யூதர்கள் மீது கடும் கோபம். மிகவும் கண்ணியமாக வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களோ வெளியிலேச் சென்று மதினாவை அழிக்க படை திரட்டி வந்திருக்கிறார்கள். இன்னொரு புறம் மதினா நகருக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகளை அழிப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.