நகர்வு-1
வணக்கம்.
நலமா எழுத்தாளரே…?
கேலக்ஸியின் உலகளாவிய சிறுகதைப் போட்டி-2025க்கு மொத்தம் 327 கதைகள் வந்ததில் மகிழ்ச்சி. சென்ற இரண்டு போட்டிகளைவிட இந்த முறை கூடுதலான கதைகள் என்பதுடன் நிறைய புதியவர்களுடன் முகம் தெரிந்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
வந்திருந்த 327 கதைகளில், எங்களின் விதிமுறைக்கு உட்பட்டு முதல் சுற்றுக்குத் தேர்வான கதைகள் மொத்தம் 237 கதைகள், 90 கதைகள் விதிமுறைகளைப் பின்பற்றி எழுதாத காரணத்தால் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.
கதைகள் வர வர, அவற்றிற்கு கதை எண் இட்டு – மற்ற விபரங்களை நீக்கி – எங்களின் முதல்கட்ட நடுவர்களுக்கு – மூன்று பேர் – அனுப்பி வைத்துக் கொண்டே இருந்ததால் அவர்கள் இதுவரை நூறு கதைகளுக்கு மேல் வாசித்து விட்டார்கள். நடுவர்கள் எல்லாக் கதைகளையும் – 237 கதைகள் – வாசித்து தங்களின் கருத்துக்கள் மற்றும் மதிப்பெண்களைத் தருவார்கள்.
அந்தக் கருத்துக்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெற்ற கதைகள் எங்களின் இரண்டாம் கட்ட நடுவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இரண்டாம் கட்டத்துக்குத் தேர்வான கதைகளின் பெயர்களை அப்போதைய நகர்வில் பகிர்ந்து கொள்கிறோம்.
சிறுகதைப் போட்டியின் முடிவுகளை வரும் ஜூன் 21-ம் தேதி எங்களின் கேலக்ஸி பதிப்பகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு , நான்காம் ஆண்டு தொடக்க விழா மேடையில் அறிவிக்க முடிவு செய்திருக்கிறோம்.
நாங்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் மூன்று கட்டங்களையும் முடித்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியிருப்பதால் எங்களின் பணிகளுக்கு இடையே இதற்காகவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதால் எங்களின் நகர்வுகள் குறித்த மின்னஞ்சல்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
உங்களின் மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாவிட்டாலோ, காலதாமதம் ஆனாலோ வருத்தம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
எங்களின் ஒவ்வொரு நகர்வுகளும் தங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதேபோல் எங்களின் சமூக வலைத்தளங்கள், வாட்சப் குழுக்கள் என எல்லாவற்றிலும் பகிர்ந்து கொள்ளப்படும்.
நன்றி.
– கேலக்ஸி கலை இலக்கியக் குழுமம்.
Add comment
You must be logged in to post a comment.