அத்தியாயம் – 17
கல்பனா சன்னாசி
அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அம்மாவும், அப்பாவும் மாறி மாறி சரணுக்கு அலைபேசியில் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
அலைபேசி அணைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியே வந்து கொண்டிருந்தது.
நடு நிசி தாண்டியும் சரண் வீடு திரும்பாததும், அவன் அலைபேசி வெலை செய்யாததும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகுந்த கவலை கொடுத்தது.
தங்களுக்குத் தெரிந்த சரணின் நண்பர்கள் அனைவரையும் விசாரித்தாகிவிட்டது. ஒருவரிடமும் சரண் குறித்த எந்த தகவலும் இல்லை.
அப்போது சங்கரியின் தொலைபேசி அலறியது. எடுத்தாள் சங்கரி.
நாங்க குட் வில் ஹாஸ்பிட்டல்லேருந்து பேசுறோம்.”
பிறகு நடந்தவை எதுவும் சங்கரியின் வசம் இல்லை.
உடல் முழுக்க ரத்தக் காயங்களோடு மருத்துவமனையில் சரணைப் பார்த்ததும் சங்கரி உடைந்தாள்.
அப்பா நொறுங்கினார்.
அழுகிற அம்மாவைத் தேற்றத் தெரியவில்லை அப்பாவுக்கு.
உண்மையில் அவருமே அழுது கொண்டுதான் இருந்தார்.
மருத்துவர் சொன்ன எதுவும் அவருக்குப் புரியவில்லை.
சரணைத் தாங்கிய ஸ்ட்ரெச்சரைப் பின் தொடர்ந்த அவரின் கரங்களை மட்டும் பற்றிக் கலங்கினார். வார்த்தைகள் வரவில்லை.
“டோண்ட் வொரி. ஹி வில் பி ஆல்ரைட்.”
இயந்திரத்தனமாக நர்ஸ் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை கட்டினார்.
ஆபரேஷன் தியேட்டர் கதவை வெறித்துக் கொண்டிருந்தாள் சங்கரி. கண் களில் நீர் வழிவது நிற்கவே இல்லை.
அருகில் அமர்ந்த அப்பா அவளை ஆறுதலாக தோளோடு அணைத்துக் கொண்டார்.
சர்ஜரி முடிந்து சரணை ஐ.சி.யூவுக்கு கொண்டு வந்தனர்.
கையிலும், முகத்திலும் குழாய்கள் சகிதம் கிடந்த சரணை பார்க்கப் பார்க்க அந்த அம்மா அங்கே குழந்தையாகிப் போனாள் – ஒரு தாயற்ற குழந்தையாக!
இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்தான் சரண்.
அம்மா தலைமாட்டில் இருந்து அவன் கையைப் பிடித்து கொண்டிருந்தார்.
அப்பா கால் பக்கம் அவன் காலை பாதத்தை வருடிக் கொண்டிருந்தார்.
“அம்மா, அப்பா” சரணின் குரல் தீனமாக ஒலித்தது.
“சரண்..” மகனை அழைத்த அம்மா, “டாக்டரைக் கூப்பிடுங்க” என்றாள் அப்பாவிடம்.
யாரும் அழைக்கத் தேவையின்றி டாக்டரே அங்கே வந்தார்.
“ஹலோ யங் மேன். ஹவ் ஆர் யூ?”
டாக்டரின் விசாரிப்புக்கு சரணின் மெல்லிய புன்னகை பதிலானது.
“கொஞ்சம் ஜாக்கிரதையா டிரைவ் பண்ணியிருக்கலாம் பையா” என்றார் டாக்டர் உரிமையாக.
“தாங்க்யூ டாக்டர் என்னைக் காப்பாத்தினதுக்கு.”
“யாரு சொன்னா? உன்னை நான் காப்பத்துனேன்னு?” புதிர் போட்டார் டாக்டர்.
அவர் கடவுள் என்று சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தான் சரண்.
அவரோ, “நீ போட்டிருந்த ஹெல்மெட்தான் உன்னைக் காப்பாத்துச்சு. அதர்வைஸ்…” டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். தலை மறுதலிப்பாக இரு புறமும் அசைந்தது.
ஹெல்மெட் என்று டாக்டர் சொன்னது சரணுக்கு தீப்தியை நினைவுக்கு கொண்டு வந்தது.
ராட்சஸி. ஹெல்மெட் இல்லை என்றால் பைக்கை ஓட்டவே விடமாட்டாள். மறந்திருந்தால் கூட அடுத்து எதிர் கொள்கிற கடையில் ஒரு ஹெல்மெட் வாங்கி மாட்டினால்தான் ஆச்சு.
“இப்டி மறக்கிற ஒவ்வொரு தடவையும் வாங்கி வாங்கி அவ்ளோ ஹெல்மெட் சேந்தாச்சு எங்கிட்ட. இப்ப நானே ஒரு ஹெல்மெட் கடை வச்சிடலாம்”, அலுத்துக்கொள்வான் சரண்.
அப்பாவின் பார்வை சொட்டிக் கொண்டிருந்த சலைன் பாட்டில் அளவில் இருக்க, “அம்மா, என் போன்..”
“ஆக்ஸிடென்ட் ஸ்பாட்ல கிடைச்சுதுன்னு போலீஸ் கொடுத்தாங்கப்பா உன் ட்ரெஸ் போன் எல்லாம். ட்ரெஸ்ஸை அம்மா அப்பவே கடாசிட்டா. போன் ஆனா நொறுங்கிடுசிப்பா”, என்றார் அப்பா கவலையாக.
அப்பாவின் கவலையை விட சரண் கவலை அதிகமாக இருந்தது.
போனில்லாமல் எப்படி ரேணுவை தீப்தி பற்றிக் கேட்பது? அவள் நம்பரும் மனதில் இல்லை. காண்டாக்ட் லிஸ்ட்டில் பேரைப் பார்த்து அழைத்தே பழகிப் போய்விட்டது. இல்லையென்றால் அப்பா அல்லது அம்மாவின் போனிலிருந்தாவது ரேணுவை அழைக்கலாம்.
கையில் காலில் மட்டும் கட்டுகளை அப்படியே விட்டு விட்டு அவன் மேல் செருகியிருந்த குழாய்களை எல்லாம் அகற்றினார்கள், மருத்துவமனையில் – ஒரு நான்கு நாட்களுக்குப் பிறகு!
“ப்ராக்ஸர் ஆன போன்ஸ் சேர்ற வரைக்கும் டோண்ட் ஸ்ட்ரெய்ன் யங் மேன். டேக் ரெஸ்ட். ஓகே?
அக்கறை அறிவுறையோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான் சரண்.

முதலில் உடைந்த தன் போனை ரிப்பேருக்கு கொடுக்க கிளம்பினான்.
அப்பா அனுமதிக்கவில்லை. “என்ன அவசரம் இப்ப போனுக்கு?”
“ஆடிஷன் கால்ஸ் எல்லாம் இந்த போனுக்குதாம்ப்பா வரும்.”
உடைந்த போனை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் அப்பா, அதை சர்வீசுக்கு கொடுக்க.
சர்வீஸ் செண்டரிலிருந்து போன் வந்தது சரணுக்கு.
“ரிப்பேர் பண்ணிடலாமாம். ஆனா டேட்டா போயிடும்கிறாங்கப்பா.”
“அய்யோ. ரேணு நம்பர்!” அலாரம் அடித்தது சரண் மனசுக்குள்.
“காண்ட்டாக்ட்ஸ் லிஸ்ட் மட்டுமாவது எப்படியாவது ரெட்ரீப் பண்ண சொல்லுங்கப்பா.”
ஏதோ சில பல நூறுகள் அதிகம் கேட்டபின், சரணின் போன் தற்சமயம் உபயோகிக்கப்பட ஏதுவான தகுதி பெற்றது.
அந்த சர்வீஸ் சென்ட்டர் ஆசாமியின் திறமையின் புண்ணியத்தில்.
சரியாகி வந்த தன் அலைபேசியைப் பார்த்ததும் சார்ஜ் இல்லை.
சார்ஜரை போனில் செருகிவிட்டு ஸ்விட்ச்சைப் போட்டால் மின்சாரம் இல்லை.
வெறுத்தது சரணுக்கு.
ஒரு வழியாக மின்சாரம் மீண்டு சார்ஜ் நிரம்பிய அலைபேசியைக் கட்டுப் போடாதா கையால் எடுத்தான்.
சிந்தனையுடன் ரேணுவை அழைத்தான்.
உடனே எடுத்துவிட்டாள். “எங்க போய் தொலைஞ்ச சரண்?”
“ஒரு சின்ன விபத்து. இப்ப நான் ஓகே.”
“அது என்ன விபத்து அது? விவரமா சொல்லு.”
“எதுக்கும்மா இப்ப அந்த விவரம்?”
“உன் நண்பி நான். உன் மேலே எனக்கு அக்கறை இருக்காதா?”
தீப்தியின் கண்களில் இருந்த செல்வாவின் கூலிங்கிளாஸ் முதல் காவலாளி சாண்டை வரை, கவலை மனசு கீழே தள்ளிவிட்ட இரவு விபத்து முதல், கட்டுப் போடாத கையில் போனோடு தற்சமயம் அவளோடு பேசிக் கொண்டிருப்பது வரை எல்லாம் ரேணுவிடம் எடுத்துரைத்தான்.
“ம்” கொட்டி முழுக் கதையும் கேட்ட ரேணு, “சரி, நீ என்ன விஷயமா எனக்கு போன் பண்ணே?”
“தீப்தியோட நான் பேசணும். ஏதாவது வழி பண்ணு.”
“நீதான் அவளை அமெரிக்காவுக்கு வழியனுப்பி வச்சிட்டு வந்திருக்கே. எங்கிட்ட விவரம் கேக்கிறியே?”
“என் போனை எடுக்க மாட்டேங்கிறா ராட்சஸி.”
“ஆங் சரண். என் கிட்ட அந்த செல்வா போன் நம்பர் இருக்கு. அவன் வழியா ட்ரைப் பண்ணிப் பாரு. தீப்தியை ரீச் பண்ணிடலாம்.”
“சரி அந்த தடியன் நம்பரை அனுப்பு.”
“அந்த தடியன் தான் இப்ப உனக்கும் தீப்திக்கும் பாலம். பாத்துப் பேசு அவங்கிட்ட.”
“ம். ம். நம்பரை அனுப்பு.”
“அனுப்பிட்டேன். ஆல் தி பெஸ்ட்.”
தன் மொபைலில் ரேணு அனுப்பிய அந்த எண்ணை சேமிக்க, செல்வா என்றப் பெயரை உள்ளிடும் போது ஒவ்வொரு எழுத்துக்கும் நூறு முறை நின்றுவிட்டு மீண்டது சரணின் நெஞ்சத் துடிப்பு.”
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.