Galaxy Books

வாழ்க்கைக்கு போதாது – களந்தை. பீர் முஹம்மது

புத்தகங்களைப் பிடிக்கும் கைகள் நறுமணம் மிக்கவை! புத்தகங்களை வாசிக்கும் கண்கள் ஒளிமிக்கவை! புத்தகங்களை உள்வாங்கும் இதயம் கனிகளின் தோட்டம்! நம் அறிவின் சுடரை ஏற்றுவன இந்தப் புத்தகங்களே! நாம் வாழுகின்ற இந்த ஒரேயொரு வாழ்க்கை நமக்குப் போதுமானதன்று.வாழ்க்கை சோலையாகவும் பெருங்கடலாகவும் விரிந்திருக்கின்றது. அவ்வாழ்வைப் பன்முகமாக வாழவும், நீந்திக் கடக்கவுமான வழிகாட்டிகள் நம் கையில் தவழப் போகும் நூற்களே! -களந்தை.பீர் முஹம்மது

தன் நிலை உணர – லதா

வாசிப்பு தன் நிலை உணர வைக்கும், சக மனிதர்களை புரிய வைக்கும், மனதை விசாலமாக்கும், இவ்வுலகையே தன்னுள் காண வைக்கும், மொத்தத்தில் நம்மை “வாழ” வைக்கும். வாசிப்பிற்கு இணையான ஒரு தோழனை நான் இதுவரை கண்டதில்லை…. எனதொரு வாழ்வில் பலர் வாழ்வை, கண்டு, உரையாடி, உணர்ந்து, பார்வை விசாலமாகி, மனது பக்குவமாகி என என் ஒவ்வொரு புரிதலிலும் உடன் நின்றது, நிற்பது புத்தகங்களே! -எழுத்தாளர் லதா

ஏன் வாசிக்க வேண்டும்? – பரிவை.சே.குமார்

வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து வாசிப்போம்.. வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து […]

மனத்திற்கான புத்துணர்வு – தெரிசை. சிவா

உழன்று சுழலும் இயந்திர வாழ்க்கையில் உடலுக்கான புத்துணர்வு உடற்பயிற்சியால் கிடைப்பதைப்போல், மனத்திற்கான புத்துணர்வு புத்தக வாசிப்பால் மட்டுமே வசப்படும்.  “வாசிப்பு” மனதை இலகுவாக்குவதோடு, வாழ்வில் எதிர்வரும் பிரச்சனைகளைப்  பற்றிய விசாலமானப் பார்வையை வாசகனுக்கு கடத்துகிறது.  ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நல்ல நண்பர்களுக்கு ஈடானது என்கிறார்கள்.  வரலாற்றில் சாதித்த அனைத்து மனிதர்களுக்கும் புத்தகம் ஒரு நல்ல நண்பனாக இருந்திருக்கிறது.  ஒருமித்த சிந்தனை, தார்மீக எண்ணங்கள், தனிமனித  புரட்சி உட்பட்ட அனைத்து அகண்ட உணர்வுகளும் வாசிப்பதால் வலுப்பெறுவதை நம்மால் உணர முடியும்.  வாசிப்பின் மற்றுமொரு அதிசயம் அது தனிமனிதனின் பகுப்பாய்வு சிந்தனையை அதிசயக்க வகையில் உயர்த்துகிறது […]

Shopping cart close