Galaxy Books

அன்னமாச்சார்யர் கீர்ததனம்

மோகன் ஜி அமராங்கன லதே- (அன்னமாச்சார்யர் கீர்ததனங்கள்) இராகம்: மாண்டுபல்லவிஅமராங்கன லதெ யாடேருப்ரமதம்புன நதே பாடேரு சரணம் -1கருட வாஹனுடு கனகரதமு பெயிரவுக வீதுல நேகீனிஸுரலுனு முனுவுலு ஸொம்புக மோகுலுதெரலிசி தெரலிசி தீஸேரு சரணம் -2இலதருட திவோ இந்த்ர ரதமுபைகெலயுக திக்குலு கெலிசீனிபலு சேஷாதுலு ப்ரம்ஹ சிவாதுலுசெலகி ஸேவலுடு ஸேஸேரு சரணம் -3அலமேலுமங்கதோ அடு ஶ்ரீவேங்கடநிலய ட ரதமுன நெகடீனிநலுகட முக்குலு நாரதா துலுனுபொலுபு மிகுல கடு பொகடேரு கீர்த்தனையின் பொருள் : பல்லவிதேவ கன்னிகைகள் ஆடுகிறார்கள்.தூய […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 30 சடகோபன் கதவு திறக்கப்பட்டதையும் பிரஜாபதி கோபத்துடன் உள்ளே நுழைந்ததையும் பார்த்தார். அசையவில்லை. அசைய முடியவில்லை. “உங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுவிட்டேன். வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.. ஒரு காலத்தில் மின்வழிப்பயணத்துக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடத்தியவர்.. ஆனால் மூளை என்பது கொஞ்சம்கூட இல்லை.” சடகோபன் எச்சில் விழுங்க முயற்சி செய்தார். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்ததால் முடியவில்லை. தொண்டை வலித்ததுதான் மிச்சம். “ஒரு வெடிகுண்டு நிபுணனைக் கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறீர்கள், என்ன என்னவோ பெரிய […]

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 29 பல்வீர் தன்னுடைய சட்டையைச் சரி செய்துகொண்டார். கழுத்துப்பட்டையைக் கட்டியபோது முதல்முறை நீளமாக வந்தது.  அடிக்கடி செய்தால் ஒழுங்காக வரும். சரி செய்து நேராகக் கட்டினார். விடுதி அறையின் வாசல் அழைப்பு மணி பாடியது. அவசரமாகத் திறக்கப் போகும் வழியில் மிதியடி தடுக்கியது. சகுனம் என்ற வார்த்தை அவர் மனதில் தோன்றியது. இந்த வார்த்தையெல்லாம் கேள்விப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது. எப்படி திடீரென்று தோன்றுகிறது? வெளியே ஒரு கருஞ்சட்டைச் சீருடை. “ஐந்து நிமிடம்.. தயாராகிவிட்டேன்.” கோட்டை […]

தொடத் தொட தொடர்கதை நீ…. – 12

ஆர்.வி.சரவணன் முன்கதை: எதிர்பாராத சந்திப்பில் முன்னாள் காதலியை மாதவன் எதிர்கொள்ளும் போது தன்னை விட்டு அவன் பிரிந்து சென்ற காரணத்தைச் சொல்லச் சொல்லி சண்டை போடுகிறாள். அதுவரை யாரிடமும் சொல்லாத அவளது குடும்பத்துக்கும் அவனுக்குமான நிகழ்வைச் சொல்ல ஆரம்பிக்கிறான். அந்த காதல் முறிவுக்கான கதையில் மகளை விட்டு விலகச் சொல்லிப் பேசும் குடும்பம் விஷத்தை எடுத்துக் குடிக்கப் போவதாய் மிரட்ட, அரண்டு போகிறான். இனி…. மாதவன் ராஜனின் வார்த்தைகளில் சற்றே மிரண்டான். மீராவின் அம்மாவும் திவ்யாவும் அதிர்ச்சியில் […]

தாலாட்டுப் பாடல்

பரிவை சே.குமார் இந்தக் காலத்தில் நாட்டுப் புறப்பாடல்களை இசையோடு பாடி தொகுத்து வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் வாய்வழிப்பாட்டுத்தான். அப்படி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தங்கள் மனதில் தோன்றியதைப் பாட்டாக்கி வைக்க, வழிவழியாகப் பலர் பாடி வந்தாலும் நம்மவர்கள் அந்தப் பாடல்களை எல்லாம் பாதுகாத்து வைக்கவில்லை. எத்தனை பாடல்கள்… எல்லாமே செவி வழியாய்க் கேட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் தலைமுறைக்கேற்ப மாற்றத்தை உள்வாங்கி நிறைய அழிந்து விட்டது என்றே சொல்லலாம். யாரோ ஒரு பாடி வைத்ததை இன்று மேடைகளில் நாங்களே […]

சோழ இலங்கேசுவரன்

கரந்தை ஜெயக்குமார் (ஆசிரியர், பணி நிறைவு) இலங்கை. இந்தியா. இந்தியாவிற்கும் இலங்கைக்குமானத் தொடர்பு என்பது, வரலாற்றிற்கும் முந்தைய கால கட்டத்திலேயே தொடங்கிய உறவாகும். தமிழ் நாட்டில் அண்மைக் காலங்களில் நடத்தப்பெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள சான்றுகளும், தொல்லியல் எச்சங்களும், இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பெற்ற ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற சான்றுகளும், தொல்லியல் எச்சங்களும், இவ்விரு பிராந்தியங்களிலும், ஒத்த கலாசாரம், பண்பாடு நிலவி வந்ததை உறுதி செய்கின்றன. தமிழ் நாட்டில் கிடைக்கப் பெற்ற பிராமி எழுத்துப் பொறிப்பும், இலங்கையில் […]

தொடத் தொட தொடர்கதை நீ…. -11

ஆர்.வி.சரவணன் முன்கதை:நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவின் குடும்பத்தைச் சந்தித்த மாதவன், மீராவுடன் மோதும் சூழல் ஏற்படுகிறது. அவர்களின் சண்டைக்குப் பின் சமாதானமாகப் போக நினைத்தவனிடம் அவள் சில கேள்விகளை முன் வைக்க, சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றை அவளிடம் சொல்ல ஆரம்பிக்கிறான்.—–இனி… தீடீரென்று மீராவின் குடும்பத்தை தன் அறை வாசலில் பார்த்ததும் அதிர்ச்சியான மாதவன் இவர்கள் ஏன் இங்கே வந்தார்கள்? அதுவும் நாம் கிளம்பும் நேரம் பார்த்து வந்திருக்கிறார்கள். விசயம் தெரிந்து போய் […]

புத்தகப் பார்வை : சைக்கிள்

அழகுராஜா மதுரையில் இருந்து தேனி ,திருமங்கலம் வழியாகத் திண்டுக்கல் செல்லும் சாலையின் மத்தியில் உள்ள ஊர் ‘செக்கானூரணி’.அந்த ஊர் மக்களின் வாழ்வியலை ‘மஞ்சள் நிற ரிப்பன்’ என்னும் சிறுகதை நூலில் சொல்லி இருந்த இயக்குனர்,கவிஞர்,எழுத்தாளர் திரு.ஏகாதசி அவர்கள், தற்பாது செக்கானூரணி அருகில் இருக்கும் பன்னியான் கிராமம் கதை களமாக வைத்து இந்த சைக்கிள் நாவலை எழுதி உள்ளார். ஏன் பன்னியானைக் கதைக்களமா வைத்து இந்த நாவலை எழுதி இருக்கார்ங்கிற எண்ணம் ந,மக்குள் எழும் என்பதை மனதில் வைத்து […]

ஸ்ரீ குஞ்சிதாங்க்ரி ஸ்தவம்

மோகன் ஜி வடமொழியில் குஞ்சிதம் என்றால் ‘வளைத்து தூக்கிய’ என்று பொருள். தனது இடது திருவடியினை உயர்த்தி நடராஜர் சிதம்பரத்தில் ஆடுகிறார் அல்லவா? அந்தத் திருவடியே குஞ்சித பாதம். அத்திருவடியை அலங்கரிக்கவென பிரத்யேகமாகத் தொடுத்த புஷ்பவளையமே காஞ்சி பரமாச்சாரியார் விரும்பு தன் சென்னியிற் சூடுவார். ஆடல்வல்லான் தூக்கிய இடதுபாதம் உமையாளுக்கல்லவா சொந்தமான பாதம்?உமையொருபாகனின் இடப்புறம் அம்பிகையின் பாதி தானே? அதனால் தான் குஞ்சிதபாதம் மேலும் சிறப்பு பெறுகிறது. சிதம்பரம் நடராஜப் பெருமானின் ஸ்தோத்திர மாலையாக, ஸ்ரீ உமாபதி […]

புத்தகப்பார்வை : கீதாரி

பரிவை சே.குமார் கீதாரி- சு.தமிழ்ச்செல்வி எழுதியிருக்கும் கிடை போடும் ஆட்டிடையர்கள் பற்றிய நாவல். ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அவர்களைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரிதான் கதையாய்தான் நாவல் நகர்கிறது. கீதாரி என்றால் ஆட்டிடையர்களில் தலைவரைப் போன்றவர், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்துபவர்கள். கோடைகாலங்களில் வயல்கள், கொல்லைகளில் கிடை போட்டு அந்த நிலச் சொந்தக்காரர்கள் கொடுக்கும் அற்பத்தொகையை வைத்து […]

Shopping cart close